எஸ்.பி.பி குரலுக்கு பின்னணி கொடுத்த யேசுதாஸ்… இப்படியெல்லாம் நடந்துருக்கா??

by Arun Prasad |
KJ Yesudas and SPB
X

KJ Yesudas and SPB

இந்திய இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார். இசைத் துறையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இணையாக பல பாடல்களை பாடி இசைப்பிரியர்களின் மனதை கொள்ளைக்கொண்டவர் கே.ஜே.யேசுதாஸ்.

KJ Yesudas and SPB

KJ Yesudas and SPB

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கே.ஜே.யேசுதாஸும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். “தளபதி” திரைப்படத்தில் இடம்பெற்ற “காட்டுக்குயிலு மனசுக்குள்ள” என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். இப்பாடல் இப்போது வரை மிகவும் பிரபலமான பாடலாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு கே.ஜே.யேசுதாஸ் பின்னணி கொடுத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?? ஆம்!

Maha Edabidangi

Maha Edabidangi

1999 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், குஷ்பு ஆகியோரின் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்த திரைப்படம் “மஹா எடபிடங்கி”. இதில் இவர்களுடன் எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரணும் நடித்திருந்தார். லலிதா ரவி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். விஜய பாஸ்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

SP Balasubrahmanyam

SP Balasubrahmanyam

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது போல் அப்பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பாடலை பின்னணி பாடியது கே.ஜே.யேசுதாஸ்.

இதையும் படிங்க: “ரஜினிக்கு ஒத்த கை”… பிரபல இயக்குனர் யோசித்த வித்தியாசமான கதை… டிவிஸ்ட்டு வைத்த சூப்பர் ஸ்டார்…

KJ Yesudas

KJ Yesudas

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிக்கும் திரைப்படங்களில் அவர் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் அவரேதான் பாடுவார். ஆனால் எஸ்.பி.பி இடம்பெறும் பாடலுக்கு கே.ஜே.யேசுதாஸ் பின்னணி குரல் கொடுத்தது இதுவே முதல்முறை ஆகும். இப்பாடல் கன்னட ரசிகர்களின் சிறந்த பக்தி பாடலாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.

Next Story