Kollywood Top grosser: தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் கதை நல்லா இருக்கா? எந்த சீன் நல்லா இருக்கு என்பது குறித்த விவாதம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லாம் எந்த படம் என்ன வசூல் என்பதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து வைத்து விடுகின்றனர்.
கிட்டத்தட்ட ரஜினியின் திரை வாழ்க்கை இனி எப்படி இருக்குமோ எனக் கேள்வி எழுந்தது. அந்த நேரத்தில் ரிலீஸான ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை அரசியலை வைத்து தான் படத்தினை ஓட்டுகிறார் என பலரும் கலாய்த்து வந்த நிலையில் அந்த பிம்பத்தினை ஜெயிலர் உடைத்தது.
இதையும் படிங்க: கௌதம் மேனன் எப்படி சார்… யோஹன் திரைப்படம் நடக்காமல் போனதுக்கு இது தான் காரணமா..?
படத்திற்கு கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமான வசூல் இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்த சூப்பர்ஸ்டார் என புகழாராம் சூடப்பட்டு வரும் விஜயின் லியோ படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இதனை அடுத்து படம் ரிலீஸாக இன்றுடன் 10 நாட்களை கடந்து இருக்கிறது. 7 நாள் 450 கோடிக்கும் அதிகமாக லியோ வசூல் செய்து இருப்பதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருந்தும் பலரும் அந்த வசூல் இருக்கவே இருக்காது என பிடிவாதம் பிடித்து வருகின்றனர். வரிசையாக செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸை கலாய்த்து வருகின்றனர். பொய் சொல்வதாக கூட பரப்பி வருகின்றனர். இதில் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு பக்கம் தடாலடியாக பேட்டி கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இது சரியில்லை.. ரிலீஸுக்கு முன்னரே கணித்த விஜய்.. ஸ்லிப் ஆகிய லோகேஷ் கணக்கு..! பேச்ச கேட்ருக்கலாம்..!
இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க சத்தமில்லாமல் அஜித் ரசிகர்கள் ஒரு விஷயத்தினை செய்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகர் ரமேஷ் பாலா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டின் அதிக வசூலை செய்த டாப் 5 திரைப்படங்களின் பட்டியலை ரிலீஸ் செய்து இருக்கிறார்.
ஆனால் அதில் ஒரு விஜய் படம் கூட இல்லை. அதற்கு பதிலாக அஜித்தின் படம் லிஸ்ட்டில் இருக்கிறது. முதல் இடம் ஜெயிலருக்கும், இரண்டாம் இடம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கும் கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து விக்ரம், பாகுபலி2, விஸ்வாசம் இடம் பெற்று இருக்கிறது. இன்னுமா இவரை நம்பிட்டு இருக்கீங்க. பாவம் பாஸ் நீங்க என பல விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…