Connect with us

Cinema News

2023ல் விட்டத்தை 2024ல் பிடிக்க தயாராகும் கோலிவுட் சினிமா!.. அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..

Kollywood Cinema: தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய படங்கள் வெளிவந்தாலும் அதில் முன்னணி நட்சத்திரங்களின் படத்தாலே வசூல் என பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கும் தகவல்கள் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை கொடுத்து இருக்கிறது.

இதுகுறித்து பிஸ்மி வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கிறது. அதன்படி, 2023ல் தமிழ் சினிமா வியாபாரத்தில் 3500 கோடியை தொட்டு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் சினிமா பெரிய உயரத்தை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..

இதற்கு பெரிய காரணமாக டிஜிட்டல் வளர்ச்சியும், டப்பிங் ரைட்ஸும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் 700 முதல் 800 தியேட்டர் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதனாலே ஒவ்வொரு படத்துக்கும் தமிழகத்திலேயே 150 முதல் 200 கோடி வரை லாபம் ஈட்டுகின்றனர். இதனால் தான் தமிழ் சினிமாவின் வியாபாரம் இவ்வளவு உயரந்தது காரணம்.

இந்தியாவில் பாலிவுட் தான் முதலிடத்தில் இருக்கு. அதன் பின்னர் கோலிவுட் தான் இருக்கிறது. 3500 கோடி வியாபாரத்துக்கு முக்கிய படங்களாக ரஜினியின் ஜெயிலர், விஜயின் வாரிசு, லியோ, தனுஷின் வாத்தி, அஜித்தின் துணிவு, பொன்னியின் செல்வன் 2 இருக்கிறது. பெரிய பட்ஜெட் படத்தின் வியாபாரத்தால் தான் இந்த சாதனையை எட்டி இருக்கிறது.

இதையும் படிங்க: நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் போகலை…ஃபேமிலி டூருப்பா… அடுத்த ப்ளான் இதான்..வெளுத்துவிட்ட பிரபலம்..!

ஆனாலும், 2023ல் அதிக சின்ன பட்ஜெட் படங்கள் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. 260 படங்களில் 188 சின்ன பட்ஜெட்கள் படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் 168 படங்கள் படுத்தோல்வி அடைந்தது. மிச்சம் இருந்த 10 படங்கள் அவரேஜாகவும், மிச்ச 10 வியாபார அளவில் வசூல் குவித்தது. இதுக்கு முக்கிய காரணமாக மக்களை ஈர்க்க தவறியதே காரணம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top