எல்லாம் இரண்டாம் பாகமா? தமிழ் சினிமாவில் இந்த வருடம் மட்டுமே இத்தனை ரிலீஸா?

Second Part: தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்கள் போல முதலில் இரண்டாம் பாகம் எடுக்கப்படாது. ஆனால் சமீபத்திய காலத்தில் அதன் தாக்கம் அதிகரித்துவிட்டது. ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட இருக்கிறது. இதன் லிஸ்ட்டே சுவாரஸ்யமாக உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர்ஹிட் திரைப்படமாக அமைந்தது ஜெயிலர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. அப்படம் முதல் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

இதை தொடர்ந்து, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்கள் கழித்து மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அதிகபட்ச காட்சி படப்பிடிப்பால் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது விக்ரம். இப்படம் கமலின் கேரியரிலும் ஹிட்டடித்ததால் அப்படத்தின் அடுத்த பாகமும் விரைவில் உருவாக்கப்பட இருக்கிறது. கார்த்தியின் ஹிட் படமான தீரன் இரண்டாம் பாகம் வேலைகளும் நடந்து வருகிறது. ஜெயம் ராஜா எழுத்தில் முதலில் ரிலீஸான திரைப்படம் தனி ஒருவன். இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர்.

இப்படம் பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது. சில நாட்கள் முன்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி மற்றும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட இருக்கிறது. ஆர்யாவின் நடிப்பில் வெளியான சார்பேட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!

காமெடி ஜானரில் கலக்கிய சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம், கலகலப்பு மற்றும் ஜிகர்தண்டா படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட இருக்கிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் பெருமளவில் முடிந்தது விட்டதாக கூறப்படுகிறது.

விஷாலின் ஹிட் படமான துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் வேலைகள் நடந்து வருகிறது. இதில் சில படங்களின் இரண்டாம் பாகம் இந்த வருட கடைசியில் தொடங்கப்பட இருக்கிறது. கங்குவா, அயலான், லியோ, கேப்டன் மில்லர், 7 ஜி ரெயின்போ காலனி ஆகியவை இதன் லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story