latest news
கோலிவுட்டின் நெப்போடிஸ குடும்பமே இவங்கதான்… நீங்களாம் பேசலாமா?
Nepotism: பாலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வரும் நெப்போட்டிச குடும்பம் இவர்கள்தான். இவர்களுடைய படத்திற்காக மட்டும் மொத்த திரையுலகின் விதிமுறைகளை மாற்றுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என கேள்விகள் எழுந்து வருகிறது.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான கங்குவார் திரைப்படம் ரிலீஸுக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தனர். தமிழ் சினிமாவின் பாகுபலி போன்று திரைப்படம் 2000 கோடி வரை வசூல் செய்யும் என அடித்து பேசியது படக்குழு.
இதையும் படிங்க: அமரன் ஹிட்டுன்னு யார் சொன்னா?.. எல்லாம் பொய்!.. பொங்கும் கங்குவா பட நடிகர்!..
ஆனால் படம் வெளியாகி முதல் இரண்டு காட்சிகளில் இருந்து தொடர்ச்சியான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஓவர் சத்தத்தால் கதை எதுவுமே புரியவில்லை என பல தரப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தது. இதில் பொங்கிய நடிகை சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்ற பெரிய படங்களில் அத்தனை குறை இருக்கிறது.
அதை விட்டுவிட்டு சூர்யாவின் படத்திற்கு மட்டும் இத்தனை கேள்வி கேட்பது எப்படி நியாயமாகும் என வரிந்து கட்டிக்கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் ஞானவேல் ராஜா மனைவி ரசிகர்களை தரக்குறைவாக விமர்சிக்க தொடங்கினார். இன்னொரு பக்கம் பிரபல தயாரிப்பாளர் மற்றும் சூர்யாவின் உறவினரான எஸ் ஆர் பிரபு விஜய் படத்தை இழுத்து சண்டைக்கு நின்றார்.
இதையும் படிங்க: கடும் ஜுரத்தில் இருந்த இயக்குனர் திலகம்.. பாடலை பாடி ஜுரத்தில் இருந்து காப்பாற்றிய பிரபல பாடகர்
இது மட்டுமல்லாமல் இனி திரையரங்கு வாசலில் யூட்யூப் சேனல்கள் ரிவ்யூ என்று நிற்கக்கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எஸ்ஆர் பிரபு, தனஞ்செயன் என பலரின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. சூர்யாவின் குடும்பத்திலிருந்து இப்படி அனைவரும் ஒரு அமைப்பில் இருந்து கொண்டு ஒரு படத்திற்காக வேலை செய்வது எப்படி நியாயமாகும்.
பெரிய படங்களை ரசிகர்கள் விமர்சனம் செய்ததே இல்லையா.? ரஜினிகாந்தின் அண்ணாத்தே, விஜயின் பீஸ்ட், கமல்ஹாசனின் இந்தியன் 2 என பல படங்களும் இணையத்தில் சிக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை குறித்தது. ஆனால் அப்போதெல்லாம் இந்த அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தது. இதுதான் தமிழ் சினிமாவின் நெப்போட்டிசம் வேலையா என கேள்விகள் எழுந்து வருகிறது.