கோலிவுட்டை காலி பண்ணப் போறாங்களா… துருவ் மற்றும் மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

by Akhilan |
கோலிவுட்டை காலி பண்ணப் போறாங்களா… துருவ் மற்றும் மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?
X

Dhruv Vikram: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை பார்த்த சினிமா வட்டாரமே கொஞ்சம் ஷாக்கில் தான் இருக்கின்றனர். இது என்ன மாதிரியான ஸ்கெட்சுனு தெரியலையே என கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். பல வருடம் கழித்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவானது கர்ணன் திரைப்படம்.

இதையும் படிங்க: முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…

தனுஷ் நடிப்பில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. இதைத் தொடர்ந்து, காமெடி நடிகர் வடிவேலுவை குணச்சித்திர நடிகராக மாற்றிய மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

உதயநிதி நடிப்பில் உருவான கடைசி திரைப்படம். மாரி செல்வராஜின் திரைக்கதை பெரிய அளவில் ரசிகர் இடம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நான்காவது படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?…

பல வருடங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. தற்போது இப்படத்தை தொடங்கும் பணியில் படக்குழு இறங்கி இருக்கிறது. இப்படத்திற்கு பைசன் காளமாடான் எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தினை பா.ரஞ்சித்தின் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் கே கிருஷ்ணா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீப காலமாகவே கோலிவுட் திரைப்படங்கள் தமிழில் பெயர் வைக்காமல் தவிர்த்து வருகின்றனர். விஜயின் கோட், அஜித்தின் குட் பேட் அக்லி, கவின் பிளடி பக்கர் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் படமும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படியே போனால் தமிழில் வைப்பது முற்றிலும் மறந்துவிடும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story