நடிக்க வைக்க நெருங்கிய கோலிவுட் இயக்குனர்கள்… கறாராக சாரி சொன்ன ஜேசன் சஞ்சய்!
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிப்புக்கு போகாமல் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். இது என்னடா புதுசா இருக்கே எனப் பலரும் வாவ் சொல்ல வைத்து இருக்கிறார். ஆனால் இந்த எண்ட்ரிக்கு பின்னாடி ஜேசன் சொன்ன பல ’நோ’க்கள் இருக்கிறதாம்.
ஸ்டார் நாயகர்களின் மகன்கள் பருவ வயதை எட்டியவுடனே அவர்களை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கதை சொல்ல தொடங்கி விடுவார்கள். இதில் பல நடிகர்கள் இதில் எதேனும் ஒரு கதையை ஓகே செய்து கோலிவுட்டில் அறிமுகமே ஆகிவிடுவார்கள். துருவ் விக்ரம், அதிதி என தலைமுறை பிரபலங்கள் கோலிவுட்டில் ஏராளம்.
இதையும் படிங்க : இனி என்னால் நடிக்க முடியாது… இயக்குனரின் காலில் விழுந்த லைலா… என்ன நடந்தது?
அந்த லிஸ்டில் விஜயின் மகன் சஞ்சய் ஒரு வயதை எட்டியவுடன் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எண்ணி பிரபல இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி பலர் கதை சொல்ல வந்திருக்கின்றனர். ஆனால் விஜய் அவனுக்கு நடிப்பு மீது விருப்பம் இல்லை. இயக்கத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார் எனக் கூறினாராம்.
இருந்தும் அவர்கள் ஜேசனிடன் பேசி பார்ப்பதாக கூற அப்படியா? சரி நீங்களாச்சு அவனாச்சு எனச் சொல்லிவிடுகிறார். மீண்டும் ஜேசனிடமே அந்த இயக்குனர்கள் கதை சொல்ல அனுப்பப்பட்டனர். ஆனால் ஜேசன் கொஞ்சமும் யோசிக்காமல் எனக்கு இதில் விருப்பம் இல்லை அங்கிள். நான் படம் தான் இயக்குவேன் என கறாராக சொல்லி விட்டாராம்.
இதையும் படிங்க : பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி… மணிரத்னம் ஆசையை நிறைவேற்ற களமிறங்கியது அவரின் மகனா?
இதை தொடர்ந்தே அவர் திரைப்பட படிப்பினை முடித்து விட்டு தற்போது லைக்காவின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். ஆனால் இதிலும் நிறைய பாலிடிக்ஸ் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது. விஜயின் மகன் என்ற முறையில் தான் ஜேசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
ஆனால் இதில் விஜயிற்கு சம்மதமோ இல்லை விருப்பமோ இல்லை. அவருக்கு இந்த விஷயம் கூட தெரியாது. சங்கீதாவின் அப்பா மூலமாக இந்த வாய்ப்பு ஜேசனுக்கு தரப்பட்டு இருக்கிறது. இதை ஜேசன் தான் இனி சரியாக பயன்படுத்தி விஜய் மாதிரி ஒரு இடத்தினை பிடிக்க வேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.