நெல்சனுக்காக காத்திருக்கும் உச்சநட்சத்திரங்கள்… ஒரே வார்த்தையில் கப்சிப் ஆன சுவாரஸ்யம்! நீ நடத்து ராசா!

Published on: August 19, 2023
---Advertisement---

கோலிவுட்டில் ஒரே வாரத்தில் தன்னுடைய பெயரை மீட்டு இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நல்ல வரவேற்புடன் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர். அவரின் நகைச்சுவையான பேச்சுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.

டாக்டர் படத்தில் இவர் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடலுக்கு வெளியிட்ட சிங்கிள் ப்ரோமோ வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஹிட்டாகியது. இதனால் நெல்சன் என்றாலே தனி ஸ்பெஷல் இடம் அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: உனக்கே தெரியல… நீயெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு… ப்ளூசட்டை மாறனை கிழித்தெடுத்த ரஜினி ரசிகர்

ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எதிர்பார்ப்புகளுடன் படம் வெளியாகியது. வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றாலும் படம் பெரிய அளவில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. அதிலும் க்ளைமேக்ஸ், வில்லன் என தொடர்ச்சியாக கேலிக்குள்ளாகினர். இதனால் நெல்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்காது எனப் பேசப்பட்டது. ஆனால் அவர் மீது ரஜினிகாந்த் மிகுந்த நம்பிக்கை வைத்தார். ஜெய்லர் படம் தொடங்கியது. இந்த படம் ஓடாது எனக் கூறியவர்கள் தான் அதிகம். சிலர் நெல்சனுக்காகவது இந்த படம் ஓட வேண்டும் என தொடர்ந்து பேச்சுகள் கிளம்பியது.

இதையும் படிங்க: 2 அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏக்கள்…கட்சி பேதங்களை கடந்து களைக்கட்டும் ‘ஈஷா கிராமோத்சவம்’!

இதில் நெல்சன் தற்போது இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் செய்ததில் ரொம்பவே களைப்பாகி இருக்கிறேன். கொஞ்ச நாள் ஓய்வு எடுத்து விட்டு அடுத்த படத்தினை அறிவிப்பேன் எனக் கூறி இருக்கிறார். ஆனால் நெல்சனின் அடுத்த பட அறிவிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.