கொட்டுக்காளி வசூலை அள்ளியதா? படத்தின் கிளைமாக்ஸால் பின்னடைவா?
சூரி 3வது முறையாகக் கொட்டுக்காளியில் ஹீரோவாகத் தொடர்கிறார். அவர் அறிமுகமான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கொட்டுக்காளியின் நிலவரத்தைப் பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்க சூரி நடிப்பில் வெளியான படம் கொட்டுக்காளி. பெர்லின் படவிழாவில் கலந்து கொண்டது முதல் படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள், பாராட்டுகள் குவிந்தன. இப்படி ஒரு படமா என பாராட்டிய அதே வேளையில் இதென்ன படமா, நீளமான குறும்படமா எனவும் விமர்சனங்கள் வந்தன.
படத்தில் லைவ் சவுண்டு தான். பின்னணி இசை இல்லை. படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்குப் புரியுமா என்பது சந்தேகம் தான் என்றெல்லாம் பேச்சுகள் வந்தன. ஆனால் பெரிய பெரிய இயக்கனர்கள் எல்லாம் பாராட்டித் தள்ளினார்கள். படம் வெளியாகி 2 நாள் ஆகிறது. வசூல் எப்படின்னு பார்க்கலாமா...
படம் வெளியானதில் இருந்து தொடர்ச்சியாக 2 நாள்கள் விடுமுறை. அதனால் படம் நல்ல வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொட்டுக்காளியைப் பொருத்தவரை படத்தின் கிளைமாக்ஸை இயக்குனர் ரசிகர்களின் பார்வைக்கே விட்டு விட்டதால் வசூலை அள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் படிங்க: படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்
கொட்டுக்காளி படத்தில் தான் முதன்முறையாக அன்னாபென் நடித்துள்ளார். படத்தில் யதார்த்தம் அதிகமாக உள்ளது. அது குறும்படம் என்றால் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்தக் காலத்தில் சவுண்டே இல்லாமல் படம் எடுத்தால் யார் ரசிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எவ்வளவு தான் ரசிகன் ரசித்துப் பார்த்தாலும் அவனுக்கு என்று கொஞ்சமாவது சினிமாவில் மசாலா கலக்க வேண்டும். அதைப் படம் செய்யத் தவறியுள்ளது என்றும் பல விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இதனுடன் இணைந்து வெளியானது படம் மாரி செல்வராஜின் வாழை. இரு படங்களுமே நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார்கள். . ஆனால், கொட்டுக்காளி திரைப்படம் 2 நாளில் வெறும் 80 லட்சங்களை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
ஆனால், தொடர்ந்து ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை விடுமுறை என்பதால் முதல்வார முடிவில் எப்படியும் வசூலில் ஒரு கோடியைத் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.