கமலுக்கே சொல்லிக்கொடுத்த கோவை சரளா... சதிலீலாவதி ரகசியம் இதுதான்!..
தமிழ் சினிமாவில் கோயம்புத்தூர் பாஷை பேசி நடிக்க தெரிந்த நடிகர், நடிகைகள் மிகவும் குறைவு. இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் சுந்தர் ராஜன், சத்தியராஜ், கோவை சரளா என வெகு சிலருக்கு மட்டுமே கோயம்பத்தூர் பாஷை நன்றாக பேச தெரியும். திரைப்படங்களிலும் அவர்கள் கோவை பாஷயைத்தான் பேசி நடித்தனர்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், ஹீரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் சதிலீலாவதி. இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதற்கு காரணம் இப்படத்தில் கமல்ஹாசனும், கோவை சரளாவும் பேசும் கோயம்பத்தூர் பாஷைதான்.
பொதுவாக கமல் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகள் பேசி நடிக்க தெரிந்த நடிகர். தமிழில் கூட பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்துள்ளார். அதேபோல், தெனாலி படத்தில் இலங்கை தமிழ் பேசியும் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு தெரியாதது கோவை பாஷை. எனவே, இந்த படத்தில் எனக்கு கோவை பாஷையை பேச நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும் என கோவை சரளாவிடம் கமல் சொல்லிவிட்டாராம்.
நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர்?..உங்களுக்கு நான் சொல்லித்தருவதா?.. என கோவை சரளா தயங்க, அவரை சம்மதிக்க வைத்தாராம். அப்படத்திற்கான டப்பிங்கை கமல் பேசும்போது டப்பிங் அறையில் கோவை சரளா கண்டிப்பாக இருக்க வேண்டும் என கமல் சொல்லிவிட்டாரம். அவர் கூறியது போலவே கோவை சரளாவும் டப்பிங் அறையில் கமலை பெண்டு கழட்டிவிட்டாராம்.
தமிழில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காமெடி திரைப்படங்களில் சதிலீலாவதி திரைப்படத்திற்கு எப்போதும் இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிக்குன்னு நிக்குது பொண்ணு!.. ஊரெல்லாம் உன்மேலதான் கண்ணு!.. சிவாங்கியின் நச் கிளிக்ஸ்…