Connect with us

Cinema History

தமிழ்சினிமாவில் திருவிழா படங்கள் – ஒரு பார்வை

கிராமத்து மண் மணக்கும் காட்சியைப் பார்க்கும் போது நமக்குள் ஒரு சொல்ல முடியாத பரவசம் ஏற்படும். அது நம் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது என்பதால் இது போன்ற பூரிப்பு உண்டாகிறது. மனது மறக்காத பல சம்பவங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருவிழாக்காலங்களில் தான் உண்டாகிறது.

நம் சொந்த பந்தங்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரையும் திருவிழா தான் ஒருங்கிணைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற திருவிழாக்களில் தான் காதலே அரங்கேறுகிறது. அப்படிப்பட்ட திருவிழாவை தமிழ்சினிமாவில் பார்க்கும் போது ஒரு வித புத்துணர்ச்சி உண்டாகிறது.

அந்த வகையில் நாம் ஒரு சில திருவிழாக் காட்சிகளைக் கொண்ட படங்களைப் பார்ப்போம். தேவாவின் இன்னிசையில் இந்தப்பாடல் உருவானது.

ஊர்க்காவலன்


1987ல் வெளியான இந்தப்படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மனோபாலா இயக்கிய இந்தப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். ரஜினியுடன் பாண்டியன், ஜனகராஜ், ரகுவரன், மலேசியா வாசுதேவன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடக்கும் கோவில் திருவிழா மற்றும் சந்தைக் காட்சிகள் மண்மணக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும்.

இந்தப்படத்தில் ரஜினிகாந்த் பட்டறைக்காரராக நடித்து அசத்தியிருப்பார். மாசி மாசம் தான், முத்தம்மா மாரி முத்தம்மா, மல்லிகைப் பூவுக்கு கல்யாணம், எடுத்த சபதம் முடிப்பேன் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

கள்ளழகர்

kallalagar

1999ல் வெளியான இந்தப்படத்தின் இயக்குனர் பாரதி. விஜயகாந்த், லைலா, மணிவண்ணன், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் காட்டப்படும் அழகர் ஆற்றில் இறக்கும் வைபவம் பிரமிக்கும் வகையில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இந்தப்படத்தில் இடம்பெற்ற இந்த திருவிழா காட்சியானது மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது எடுக்கப்பட்டது.

வாராரு வாராரு அழகர் வாராரு என்ற இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் மதுரையில் சித்திரைத்திருவிழா நடக்கும்போது எல்லாம் இன்று வரை வீதியெங்கும் ஒலித்துக் கொண்டே இருப்பது இந்தப்படத்தின் தனிச்சிறப்பு.

தேவர் மகன்

Kamal and sivaji in devar magan

1992ல் வெளியான இந்தப்படம் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆஸ்கர் விருதுக்கும் சென்றது. கமல், சிவாஜி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த இந்த படத்தை பரதன் இயக்கினார். இந்தப்படத்தில் வரும் தேர்த்திருவிழாவைப் பார்க்கும் போது நமக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷம் உண்டாகும். திருவிழாவின் போதே நடக்கும் விபரீதம் நம்மை பதை பதைக்க வைத்து விடும்.

காட்சியை தத்ரூபமாக எடுத்து இருப்பார்கள். கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்தார். கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், கல்லபார்ட் நடராஜன், தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன், மதன்பாப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கரகாட்டக்காரன்

Ramarajan and Kanaga in karakattakkaran

ராமராஜன் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நகைச்சுவைக்காட்சிகள் இந்தப்படத்தில் இன்று வரை பேசப்படுகின்றன. உதாரணத்திற்கு வாழைப்பழக் காமெடியைச் சொல்லலாம். கோவில் திருவிழாவில் நடக்கும் கரகாட்டக்கார நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். தென்னிந்தியாவில் அதுவும் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது இந்த கரகாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் நடக்கும் ஊர்த்திருவிழா படத்தில் பிரசித்திப் பெற்றது. கனகா இந்தப்படத்தில் பிரமிக்கும் வகையில் நடித்து நடனத்திலும் அசத்தியிருப்பார். உண்மையான கரகாட்டக்காரியாகவே வந்து அசத்தியிருப்பார். இந்த மான் உந்தன், குடகு மலைக்காற்றில், மாங்குயிலே பூங்குயிலே, மாரியம்மா…மாரியம்மா, முந்தி முந்தி விநாயகரே, நந்தவனத்தில் ஒரு, ஊரு விட்டு ஊரு வந்து, பாட்டாலே புத்தி சொன்னான் ஆகிய பாடல்கள் மனது மயக்குபவை. ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்த படம் இது.

விருமான்டி

படத்தில் சுற்றி சுற்றி கிராமத்துப் பின்னணியைக் கொண்டே அமைந்துள்ள யதார்த்தமான படம். கோவில் திருவிழாவைக் காட்டும் போது பிரம்மாண்டமாக எடுத்து இருப்பார்கள்.

ஜல்லிக்கட்டு நடக்கும்போதும் படத்தின் காட்சிகள் நம்மை மெய்மறக்கச் செய்யும். படத்தில் கமல், பசுபதி உள்பட அனைவருமே அந்த வட்டார பாஷையைப் பேசி அசத்தியிருப்பார்கள். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

2004ல் வெளியான இந்தப்படத்திற்கு கமல் கதை எழுதி இயக்கினார். அபிராமி, ரோகிணி, நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒன்னவிட, அன்னலெட்சுமி கண்ணசச்சா, நெத்தியில பொட்டு வச்சு, மகராசி மண்ண விட்டு போனியே, கருமாத்தூர் காட்டுக்குள்ளே, அந்த காண்டாமணி, மாடவிளக்கே, கொம்புல பூவ சுத்தி, கர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறுது, சண்டியரே சண்டியரே ஆகிய பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top