நல்ல காலம் கூடியிருச்சு போல.. திருமணம் பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்ட kpy பாலா!
KPY Bala: விஜய் டிவியின் மூலம் தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் கே.பி.ஒய் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முதலாக பிரபலமானவர் தான் பாலா. தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடைய நகைச்சுவை திறமையை மக்கள் அறிய பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த செல்ல பெயர் வெட்டுக்கிளி பாலா. அவர் டிவி நிகழ்ச்சியில் எண்ட்ரி ஆகும் போது அவருக்கு துணையாக இருந்தவர்கள் மூத்த நகைச்சுவை நடிகர்களான அமுதவாணன், வடிவேலு பாலாஜி, ராமர் போன்றவர்கள்தான். பாலாவுக்கு பக்க பலமாக இருந்து இன்று ஒரு பெரிய நிலைமைக்கு கொண்டு வந்ததுக்கு இவர்களும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதையும் படிங்க: தயாரிப்பாளருக்குத்தான் எல்லாமே சொந்தம்.. இளையராஜா பணத்தாசை பிடிச்சவரா?.. தியாகராஜன் ஓப்பன் பேட்டி!..
கலக்கப்போவது யாரு ஆறாவது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற பாலா தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார். அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதில் கோமாளியாக நடித்து மேலும் மக்களின் மொத்த அன்பையும் பெற்றார் .
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு பாலாவிற்கு கிடைத்தது. அதனால் அவரின் செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. ஆனால் தனக்கு கிடைக்கிற வருவாயை தனக்கு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் அதில் பெரும் பங்கை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து வந்தார் பாலா. அதுவும் இப்போது லாரன்ஸ் ஆரம்பித்த மாற்றம் என்ற சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு லாரன்ஸ் உடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பேரரசு பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!.. விடுதலை 2 அப்டேட்டையும் சொல்லிட்டாரு!..
இவரை ஒரு மனிதநேயமிக்க இளைஞராக தான் மக்கள் பார்த்து வருகிறார்கள். பெரிய நடிகர்கள் செய்ய முடியாத சில விஷயங்களை கூட பாலா தனக்கு கிடைத்த வருமானத்தை வைத்து செய்து வந்தார். அதுவே திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, வெள்ளம் வந்த பகுதிகளில் பல்வேறு உதவிகளை செய்வது என பல சமூக சேவைகளை செய்து வந்தார் பாலா.
இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பாலாவின் திருமணம் பற்றிய ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த பேட்டியில் அவர் கூறும் போது இப்பொழுதெல்லாம் மக்களுக்கு உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என தோன்றுகிறது என கூறினார் பாலா. மேலும் உங்களுடைய திருமணம் எப்போது எனக்கு கேட்டதற்கு அதற்கு பதில் அளித்த பாலா ‘திருமணமா சார்? காலை 4.30லிருந்து 6 மணிக்குள். தேதி எப்பொழுது என பின்பு அறிவிக்கப்படும்’ என காமெடியாக சொல்லிவிட்டு சென்றார்.
இதையும் படிங்க: இந்த ஓப்பன் போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?.. ஸ்டார் பட ஜிமிக்கி காட்டுற சீனே வேற!..