யோகி பாபுவால் கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு வந்திருக்கும் சிக்கல்… ஏன் இப்படிலாம் பண்றாரு?

by Arun Prasad |   ( Updated:2023-04-10 02:29:30  )
Yogi Babu and KS Ravikumar
X

Yogi Babu and KS Ravikumar

கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த கம்மெர்சியல் இயக்குனர் என்பதை பலரும் அறிவார்கள். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து “ரூலர்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் வேறு எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை. இதனிடையே “நான் சிரித்தால்”, “கூகுள் குட்டப்பா”, “மாயோன்”, “கோப்ரா”, “மிரல்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் ஆகியோரை இணைத்து, கே.எஸ்.ரவிக்குமார் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் மிக மும்முரமாக தொடங்கியது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

யோகி பாபுதான் காரணமாம்…

இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்திற்கான தாமதம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் தாமதத்திற்கு யோகி பாபுதான் காரணமாம். இத்திரைப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதற்காக 25 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தாராம் யோகி பாபு. ஆனால் யோகி பாபு இப்போது பிசியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். ஆதலால்தான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறதாம்.

Next Story