அந்த விஷயத்துல ஏ.ஆர்.ரகுமான் பயங்கர கில்லாடி… கேஎஸ்.ரவிகுமார் சொன்ன ஆச்சரிய தகவல்!

arrahman ks ravikumar
தமிழ்த்திரை உலகில் வெற்றிப்பட இயக்குனராக பல ஆண்டுகளாகக் களத்தில் இருந்தவர் கே.எஸ்.ரவிகுமார். அவ்வை சண்முகி, தசாவதாரம், முத்து, படையப்பா, நாட்டாமை, சூர்யவம்சம், வரலாறு என பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவரது படங்கள் என்றாலே அது சூப்பர்ஹிட் ஆகிவிட்டது.
அந்தளவுக்கு கடினமான உழைப்பாளி அவர். இரவு, பகல் என பார்க்க மாட்டார். எந்நேரமும் படத்தை நல்ல முறையில் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவாராம்.
படையப்பா படத்தில் ரஜினி, சிவாஜியை வைத்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் படத்தை முத்தாய்ப்பாக எடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவீட்டான தகவலை கேஎஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
படையப்பா படத்தில் சுத்தி சுத்தி வந்தீக பாட்டில் சிரிப்பு ஒண்ணு வரும். ரெகார்டிங் அப்போ நான் எவ்வளவோ கேட்டும் பாடகி ஹரிணிக்கு அது வரல. அதனால என்ன மேடம் பாட்டு எவ்வளவு நல்லா பாடுறீங்க? சிரிக்க மாட்டேங்கிறீங்களே… ஆளு மட்டும் அழகா இருந்து என்ன பிரயோஜனம்? சிரிக்கக் கத்துக்கணும் என்று கமெண்ட் அடித்தேன். நான் அப்படி கமெண்ட் அடிக்கும்போது அவங்க ஐயோ என்று சிரிச்சாங்க. இது எல்லாமே ரெக்கார்டு ஆயிட்டு இருக்கு. அது எனக்கு தெரியாது.
அந்த சிரிப்பை எடுத்து ஏ.ஆர்.ரகுமான் பாட்டுல போட்டுட்டாரு. நான் மறுபடியும் சிரிங்கன்னு சொன்னேன். சிரிக்கலன்னா விட்டுருங்க சார். பரவாயில்ல. நீங்க பாடிடுங்கம்மான்னு ரகுமான் ஹரிணிகிட்ட சொல்லிட்டாரு. கடைசில நான் எடுத்துட்டேன் என்று அந்த சிரிப்பை எடுத்து பாட்டுல போட்டு அசத்தி விட்டார் ஏ.ஆர்.ரகுமான் என்று கே.எஸ்.ரவிகுமார் ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
1999ல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம் படையப்பா. சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ், வடிவுக்கரசி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். என் பேரு படையப்பா, மின்சார பூவே, சுத்தி சுத்தி, வெற்றி கொடி கட்டு, ஓஹோஹோ கிக்கு ஏறுதே ஆகிய பாடல்கள் உள்ளன.