என்னது குடும்பஸ்தன் சிபிராஜ் நடிக்க வேண்டியதா? சூப்பர் படத்தை இப்படி மிஸ் பண்ணிட்டாரே!

by sankaran v |
manikandan, sibiraj
X

manikandan, sibiraj

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்து வெளியான படம் குடும்பஸ்தன். வழக்கம்போல காதல் கதை தான். காதலித்து கல்யாணம் செய்து கஷ்டப்படுகிறான் நாயகன். இருந்தாலும் அக்காவின் கணவர் முன் கெத்தாக வாழ வேண்டும் என நினைக்கிறான். அவனுக்கு சில சூழல்களால் வேலை பறிபோகிறது. இதனால் கடனுக்கு மேல் கடன் வாங்குகிறான்.

அதை எப்படி அடைக்கிறான்? வாழ்வில் முன்னேறினானா என்பதை படம் சொல்கிறது. இந்தப் படம் இந்தக் கால தலைமுறையினருக்கு ஏற்ப எழுதியுள்ளார் இயக்குனர். படத்தின் திரைக்கதை ரொம்பவே அருமையாக உள்ளது. மணிகண்டனின் நடிப்பும், அவரது அக்கா கணவராக நடித்த குருசோமசுந்தரத்தின் நடிப்பும் மாஸாக உள்ளது.

குடும்பஸ்தன் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார். வைசாக் இசை அமைத்துள்ளார். சான்வி மேக்கனா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க யூகிக்கவே முடியாத அளவு திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி. இதுதான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்றே சொல்லலாம்.

படம் வெளியான போது பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள். பொதுமக்கள் கொண்டாடினார்கள். இந்தப் படத்தில் முதல்ல சத்யராஜ் மகன் சிபிராஜ் தான் நடிக்க வேண்டி இருந்ததாம். அப்புறம் மிஸ் பண்ணிட்டாரு. அதை அவரே சொல்றாரு பாருங்க.

kudumbasthanசமீபத்தில் குடும்பஸ்தன் படம் பார்த்தேன். அந்தக் கதை எனக்கும் வந்தது. சில காரணங்களால் அந்தப் படம் மிஸ் ஆகிடுச்சு. ஆனா அந்தப் படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் ஸ்லாங் என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ணின அளவுக்கு வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது. எனக்கு படம் பார்க்கும்போது அவங்க பேசுற ஸ்லாங் எல்லாம் எனக்கு ஊருக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல் இருந்தது என்கிறார் நடிகர் சிபிராஜ்.

Next Story