யோகிபாபுவுக்கு அடுத்த மண்டேலாவா குய்கோ?.. பிரபல விமர்சகர் என்ன சொல்றார் பாருங்க!..

தமிழ்த்திரை உலகில் சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி வாகை சூடுவது புதிதல்ல. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். அந்த வகையில் தற்போது வந்திருக்கும் படமும் அப்படித்தான் உள்ளது. பெயர் குய்கோ. நேற்று வெளியான இந்தப் படத்தோட விமர்சனத்தை வலைப்பேச்சு அந்தனன் சொல்கிறார். பார்க்கலாமா...

குடியிருந்த கோயிலின் சுருக்கப் பெயர் தான் குய்கோ படம். யோகிபாபு, இளவரசு, விதார்த் என பலரும் நடித்து கிராமத்துக் கதையைக் கலகலப்பாக்கி உள்ளனர். அருள் செழியன் நல்ல கதைசொல்லி. படத்தை இயக்கி உள்ளார்.

யோகி பாபு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார். இவர் திடீரென சவுதிக்குப் போய் ஒட்டகம் மேய்க்கிறார். அவரோட அம்மா இறந்து போகிறார். அவரது அம்மாவின் உடலை ஒரு சவப்பெட்டியில் வைக்கிறாங்க. யோகிபாபு வந்த பிறகு அந்த சவப்பெட்டியையே விலைக்கு வாங்கி இது எங்க அம்மா குடியிருந்த கோயில்னு அதைக் கும்பிட ஆரம்பிச்சிடறாரு.

அதுக்கு அப்புறமா அந்த ப்ரீஷர் பாக்ஸ் என்ன ஆச்சு? எப்படி போச்சுங்கறது தான் மற்ற கதை. இந்தப்படத்தில் வரும் டயலாக்குகள் தான் மொத்த கதையையே எடுத்துட்டுப் போகுது.

மண்டேலா படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நல்ல நடிப்பைக் கொடுத்துருக்கிறார் யோகிபாபு. டைமிங் காமெடியில் மனிதர் பிச்சி உதறுகிறார். படத்தில் வடிவேலு, அட்டாக் பாண்டியை எல்லாம் யோகிபாபு காமெடியாய் கலாய்க்கிறார்.

அங்கு ஒரு அரசியல் சார்ந்த காமெடி. சேகர், பாபு என இருவர் கோவிலில் உண்டியலைத் திருடுவர். யோகிபாபு இதைப் பார்த்ததும் அங்க சேகர்பாபு கோயில் கோயிலா நல்லது பண்ணிக்கிட்டு இருக்காரு. இவங்க போயி உண்டியலைத் திருடுறாங்களன்னு கலாய்க்கிறார்.

சின்னக் கேரக்டரா இருந்தாலும் விதார்த் நல்ல கதையை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு இந்தப் படத்துல நடிச்சிருக்காரு. ப்ரீஷர் பாக்ஸை ஆன் பண்ணி விட வருவார். அதான் அவரோட கேரக்டர். ஆனா அவரை ஊரை விட்டுப் போக விடாம என்னா பாடு படுத்துவாங்கங்கறதை படத்துல ஜாலியா சொல்லியிருக்காங்க.

படத்துல திண்ணைல ஒரு பாட்டி உட்கார்ந்துக்கிட்டு இருக்கும். அது முதற்கொண்டு ஒவ்வொரு கேரக்டருக்குமே டைரக்டர் முக்கியத்துவம் கொடுத்திருக்காரு.

Kuiko

Kuiko

கிராமத்துல உள்ள பல்வேறு குணங்களை உடைய மனிதர்களையும் படத்தில் சிறப்பா காட்டியிருக்காங்க. இயக்குனர் பத்திரிகை துறையில் இருந்து வந்ததால சமூகம் சார்ந்த நிறைய பிரச்சனைகளைப் படத்தில் வச்சிருக்காரு. குறிப்பா 100 நாள் வேலை திட்டம் காட்சி வரும். விவசாய வேலைகளை ஊக்கப்படுத்தத் தான் இந்த திட்டமே வரும்.

ஆனா அதனால விவசாய வேலைகளுக்கே ஆள் கிடைக்கல. அந்த திட்டம் எப்படி செயல்படுதுன்னு படத்துல படுசுவாரசியமா காட்டியிருக்காங்க. யோகிபாபுவின் பஞ்ச் வசனம் ஒண்ணு வருது. ஆடு மேய்க்கிறவரையே ஆண்டவரா ஏத்துக்கும்போது மாடு மேய்க்கிற என்னை நீ மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டீயா? ஊருல கமிஷன் அடிக்கிற கேரக்டர்ல இளவரசு அருமையா நடிச்சிருக்காரு. ஆண்டனி தாஸ் இசை கிராமியப் பாடல்களில் பட்டையைக் கிளப்புது.

பாட்டி செத்ததுக்கு அணிவகுப்பு மரியாதை, ஒட்டகம் மேய்க்க சவுதியில் யோகிபாபுவை விட்டா வேற ஆளே இல்லங்கற மாதிரி காட்டுவது என பல லாஜிக் மீறல்கள். மொத்தத்துல குய்கோ படம் சின்ன பட்ஜெட்டா இருந்தாலும் ரசிக்கும்படி எடுத்திருக்காங்க.

 

Related Articles

Next Story