விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கின்றன. பொங்கலுக்கு இந்த படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. இதற்கு பின்னணியில் ஏதோ அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஜன நாயகன் என்று சொல்லப்பட்டாலும் சில காட்சிகளை மட்டும்தான் பகவந்த் கேசரி படத்தில் இருந்து ரீமேக் செய்திருக்கிறார்களாம். மற்ற பெரும்பாலான காட்சிகளை எச்.வினோத் புதுசாகவே சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சில பேர் ஜன நாயகன் படத்தை பார்த்துவிட்டு பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர்.
Also Read
சொன்ன தேதியில் ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற ஒரு சந்தேகமும் இருந்து வருகிறது. தணிக்கை சான்றிதழ் கொடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை படக்குழு நாடினார்கள். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தும் அதை இன்று ஒத்திவைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் இன்று ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் பற்றி பிரபல நடிகர் ஒருவர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். இவரை ஜன நாயகன் டிரெய்லரில் பார்க்கலாம். டிரெய்லரில் ஆரம்பத்தில் விஜயை பற்றி பில்டப் கொடுப்பார். அவரின் கண், வாய் எல்லாம் தனித்தனியாக காட்டுவார்கள். அவர் வேறு யாருமில்லை. குணச்சித்திர நடிகர் குமார் நடராஜன். இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

அஜித்துடன் முகவரி, வலிமை, தொடரும், நேர் கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் உதயா, தெறி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெறி படத்தில் குமார் நடராஜன் நடிக்கும் போது விஜய் ‘சார் உங்களுக்கு நடிக்கவே தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் இவருக்கு ஒரே ஷாக். அதன் பிறகு அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடுகிறீர்கள் என்று கூறினாராம் விஜய்.
ஜன நாயகன் படத்தின் போது விஜயிடம் ‘எப்படி உங்க ஹெல்த்தை அப்படியே maintain பண்றீங்க’ என்று குமார் நடராஜன் விஜயிடம் கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் ‘புரடியூசர்தான் காரணம். எனக்கும் நல்லா சாப்பிடவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் உடம்பு போயிடுமே ’என்று கூறினாராம் விஜய்.



