சறுக்க இருந்த திரை வாழ்க்கை… நடிப்பை விட்டு இதில் குதித்த அர்ஜூன்… கடைசியில் காப்பாத்திவிட்ட குஷ்பூ..!
Arjun Kushboo: நடிகர் அர்ஜூன் தன்னுடைய திரை வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள செய்ய இருந்த விஷயத்தில் நடிகை குஷ்பூ கடைசியில் காப்பாறியதால் தான் அவரே சற்று பிழைத்து கொண்டாராம். அப்படி அவர் என்ன செய்தார் என்ன படத்தில் இந்த விஷயம் நடந்தது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
கன்னடா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்த அர்ஜூனுக்கு அங்கையே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. அதை தொடர்ந்து நன்றி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: பிக்பாஸ் 7 சீசனை பேன் பண்ணுங்க.. மொக்க கண்டெஸ்டண்ட்… யக்கோவ்..! நீயா பேசுற..!
இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் அவரது படம் பெரிய அளவில் வசூல் படைக்கவில்லை. ஒரு கட்டத்தில் கேரியரே ஆட்டம் காணும் நிலையில் இருந்ததால் படத்தினை இயக்கலாம் என்ற முடிவுக்கு அர்ஜூன் சென்றுவிட்டார்.
ஆனால் அவரின் படத்தினை யாரும் தயாரிக்க முன்வரவில்லையாம். பலரிடம் ஏறி இறங்கியும் கூட அர்ஜூன் கேரியரால் யாரும் அவரின் கதையை ஓகே சொல்லவில்லை. இதனால் அப்படத்தினை அவரே தயாரிக்க முன்வந்து விட்டார். ஆனால் படத்தில் யார் நடிகை என்ற கேள்வி வந்து இருக்கிறது.
இதையும் படிங்க: தியேட்டரில மட்டும் இல்ல ஓடிடியிலும் போட்டி தான்.. இதுலையாது தப்புமா ஜப்பான்.. இந்த வார ரிலீஸ் அப்டேட்..!
இதையடுத்து, அப்போது செம டாப்பில் இருந்தவர் நடிகை குஷ்பூ. அவரிடம் கேட்க சொல்லி இருக்கின்றனர் அர்ஜூனின் நெருங்கிய வட்டாரம். ஆனால் அர்ஜூனுக்கு தயக்கம் இருந்ததாம். அர்ஜூன் படத்தில் அறிமுகம் ஆனதால் அவர் மீது குஷ்பூவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது. இதனால் அர்ஜூன் கேட்ட அடுத்த நொடி ஓகே சொன்னாராம்.
இதனை தொடர்ந்து அர்ஜூன் எழுதி இயக்கி தயாரித்த படம் தான் சேவகன். அப்படத்தில் குஷ்பூ, நாசர் ஆகியோர் நடித்து இருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்தே அர்ஜூனின் கேரியர் மீண்டும் சரியாகியது குறிப்பிடத்தக்கது.