என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?

Published On: December 17, 2023
prabhu
---Advertisement---

Actor Prabhudeva: அஜித் , விஜய்க்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக 90களில் வலம் வந்தவர் நடிகர் பிரபுதேவா. சிம்ரன் , மீனா, நக்மா என பல முன்னணி நடிகைகளின் ஆஸ்த்தான ஹீரோவாகவே அறியப்பட்டார் பிரபுதேவா.

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றித் திரைப்படங்களாகவே அமைந்தன. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இன்னமும் இருந்து கொண்டு வருகின்றனர். நடிகராக ஜெயித்த பிரபுதேவா இப்போது இயக்கத்திலும் வெற்றிக் கண்டு வருகிறார்.

இதையும் படிங்க: அப்பா இருந்தபோது இருந்த ரஜினி கமல் வேற!.. இப்ப வேற!.. மனம் திறக்கும் பாலச்சந்தர் மகள்…

தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்து விட்டு அதன் பின் அந்தப் படத்தில் விஜய் நடித்த சம்பவத்தை பற்றி பிரபல தயாரிப்பாளரான தேனப்பன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியதே பிரபுதேவாதானாம். மின்சாரக் கண்ணா பட சூட்டிங்கிற்காக தேனப்பனும் விஜயும் சுவிட்சர்லாந்து சென்றார்களாம்.

இதையும் படிங்க: ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கே ஆட்டம் காட்டிய நடிகர்… கமல் படத்தில் நடந்த சம்பவம்!…

அப்போது அடுத்தப் படத்திற்காக தேனப்பன் விஜயிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருந்தாராம். அந்த நேரத்தில் விஜய் தேனப்பனிடம் ‘எஸ்.ஜே,சூர்யா என்ற இயக்குனர் வாலி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நான் படத்தை பார்த்தேன். நன்றாக பண்ணியிருக்கிறார். அவரிடம் கேளுங்கள். அடுத்தப் படத்தை அவரை வச்சு பண்ணிடலாம்’ என விஜய் கூறினாராம்.

அப்போது எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் பிரபுதேவாவை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தாராம். நேராக ஏ.எம்.ரத்தினத்திடம் தேனப்பன் எனக்காக இந்தப் படத்தை விட்டுக் கொடுங்கள். விஜய் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் பண்ண மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: நோ சொன்ன கமல்! எண்ட்ரி கொடுக்கும் நாட்டாமை.. பிக்பாஸில் அடுத்த தொகுப்பாளர் இவர்தானா?!..

ரத்தினமும் சரி என சொல்ல விடுமுறை பயணமாக தேனப்பன் லண்டன் போய்விட்டு ஒரு மாதம் கழிந்து வந்து பார்த்தால் குஷி படம் ரத்தினம் பேனரில் விஜய் நடிக்க ப்ரடக்‌ஷனில் தயாராகிக் கொண்டிருந்ததாம்.இதைப் பார்த்ததும் தேனப்பனுக்கு ஷாக் ஆகிவிட்டதாம். அதன் பிறகு என்ன செய்ய முடியும் என அமைதியாக இருந்துவிட்டாராம்.