பாலா கிருஷ்ணா படத்தை சுட்டா தளபதி 69 எடுக்குறீங்க?!.. அட போங்கப்பா!...

thalapathy 69
தளபதி 69 திரைப்படத்தை தயாரித்து வரும் கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனம் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்கை அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராகவும், ஒரு படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்கக்கூடிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இதனால் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்திருக்கும் நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: லப்பர் பந்து பட நடிகை தட்டி தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. அப்போ திரிஷா?.. இது என்ன டுவிஸ்ட்டு..!
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். மேலும் மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தளபதி 69 திரைப்படம் நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதை களத்தை கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தின் கதை பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் கதை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Bhagavanth Kesari
கடந்த ஆண்டு அனில் ரவிப்புடி இயக்கத்தில் அக்டோபர் 18ஆம் தேதி பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பாலகிருஷ்ணா உடன் இணைந்து காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் ரீமேக் தான் தளபதி 69 திரைப்படம் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் சென்னையில் தற்போது ஜெயில் செட்டப் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகின்றது. பகவந்த் கேசரி படத்தின் இண்ட்ரோ சீன் ஜெயில் சீன் என்பதால் இந்த திரைப்படம் தானோ? என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
இதையும் படிங்க: சர்தார் 2-ல எஸ்ஜே சூர்யா இப்படி நடிக்கிறாரா?. எப்படி யோசிச்சுருக்காரு பாருங்க டைரக்டர்..
அதாவது தளபதி 69 திரைப்படத்தை கேவிஎன் ப்ரொடக்சன் நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம் தற்போது தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் பகவந்த் கேசரியின் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை வாங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது. நடிகர் விஜய்யின் கடைசி படம் இப்படியா அமைய வேண்டும். ஒரு நல்ல கதையுடன் இருக்கக் கூடாதா? என்று தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.