எல்லா கோட்டையும் அழிங்க… லால் சலாம் படத்துக்கு நல்ல காலம் பொறக்கலையப்பா!...

by Akhilan |   ( Updated:2024-08-27 11:25:45  )
எல்லா கோட்டையும் அழிங்க… லால் சலாம் படத்துக்கு நல்ல காலம் பொறக்கலையப்பா!...
X

#image_title

Lal salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கசிந்த தகவல் குறித்த உண்மை வெளியாகி இருக்கிறது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பல வருடங்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 33 வருடங்கள் கழித்து நடிகை ஜீவிதா இப்படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் மறைந்த இசை கலைஞர்களான பாம்பா பாக்கியா மற்றும் ஷாகுல் ஹமீத் இருவரின் குரலை ஏஐ மூலம் உருவாக்கியிருந்தார். திமிரி எழடா என தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் அறிவிப்பு வரை ரசிகர்கள் இதற்கு பெரிய ஆர்வத்துடன் தான் காத்திருந்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னுடைய தந்தை சங்கி இல்லை என பேசி இருப்பார். இப்படம் பெரிய விருதுகளை பெறும் என ஓவர் பில்டப் கொடுத்திருந்தார்.

laal salaam

இதை தொடர்ந்து, பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு போனவர்களுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி படமாக லால் சலாம் அமைந்தது. தொடர்ந்து பின்னர் பேட்டியளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது.

இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..

அதனால் தான் இருந்ததை வைத்து படத்தை வெளியிட்டோம் என பேசி இருப்பார். இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொலைந்த காட்சிகளை எடுத்து வாருங்கள் பின்னர் வெளியிடலாம் என கூறியதாகவும் தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் செப்டம்பர் 20 லால் சலாம் வெளியாகும் என அறிவிப்புகள் காலையிலிருந்து கசிந்தது.

ஆனால் அது குறித்து விசாரிக்கும் போது லால் சலாம் திரைப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவாகவில்லை. இதனால் அப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகாது என்றும், காலையிலிருந்து வெளியாகும் தகவல்கள் வதந்தி தான் எனவும் கூறப்படுகிறது.

Next Story