‘லால் சலாம்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் ரஜினி! குவியும் பாராட்டுக்கள்

Lal Salaam Movie: இன்று உலகெங்கிலும் ரிலீஸாகியிருக்கிறது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

இரு ஊர்களுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்கள் வெளி வந்திருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கும்.

இதையும் படிங்க: விஜயாவிடம் மாட்ட இருக்கும் மனோஜ்… இதுக்கு பருத்தி மூட்ட குடோனிலே இருக்கலாமே?

அதுவும் ரஜினியின் கேமியோ ரோல் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்றும் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லால் சலாம் படத்தை பார்த்த அனைவரும் இதுவரை பாஸிட்டிவான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

முதல் பாதியை பொருத்தவரை பக்காவான ஒரு கிராமிய பிண்ணனில மறைமுக அரசியல் படம். இரண்டாம் பாதி தெறிக்க விட்டிருக்கிறார் ஐஸ்வர்யா என்றும் கூறி வருகிறார்கள். மேலும் படம் ரிலீஸான நேரம் முதல் இப்போது வரை அமெரிக்காவில்தான் படத்தை மிகவும் பாராட்டி வருகிறார்களாம்.

இதையும் படிங்க: அட சிலுக்கையே ஓவர்டேக் பண்ணிட்டாரே நம்ம வீஜே அஞ்சனா!. போட்டோ பாருங்க!..

ரஜினியின் ரோல் கேமியோவை விட அதிகளவு இருப்பதாகவும் அது பார்ப்பவர்களை பெரிய அளவில் உலுக்குவதாகவும் கூறப்படுகிறது. அந்தளவு மாஸ் காட்டியிருக்கிறாராம் ரஜினி. இதற்கெல்லாம் காரணமாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இன்னும் ஓரிரு நாள்களில் படத்தின் மொத்த விமர்சனமும் தெரிந்து விடும். எந்தளவுக்கு மக்களை கவர்ந்திருக்கிறது என்று.

இதையும் படிங்க: இதைவிட ஒரு மகளுக்கு பெரிய கிரெடிட் இருக்குமா என்ன? ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

 

Related Articles

Next Story