ஆத்தாடி இத்தனை கோடியா?!.. ஜெயிலரை தாண்டிய லால் சலாம்!.. செம ஜாக்பாட்தான்!...

முன்பெல்லாம் ஒரு படம் தியேட்டரில் எவ்வளவு வசூல் ஆகிறது என்பதுதான் கணக்கு. அதாவது திரையரங்குகள் மூலம் மட்டுமே வியாபாரம் நடந்து வந்தது. அதன்பின் தொலைக்காட்சிகள் புதிய படங்களை வாங்கி தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, தமிழ் புத்தாண்டு போன்ற நாட்களில் ஒளிபரப்ப துவங்கினார்கள்.

அப்போதுதான் ‘உலக தொலைக்காட்சியில் முதன் முறையாக திரையரங்கிற்கு வந்து சில நாட்களே ஆன’ என்கிற குரல் ஒலிக்க துவங்கியது. எனவே, தொலைக்காட்சி உரிமை மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்தது. இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், சோனி, ஜீ தமிழ் என ஓடிடி தளங்கள் வந்துவிட்டது.

இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..

இதன் மூலம் ஒரு பெரிய தொகை தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது. பெரிய நடிகர் படம் எனில் பல கோடிகள் கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்குகிறது. அதை வைத்து படத்தின் ஹீரோவுக்கே சம்பளம் கொடுக்கலாம் என்பதால் சினிமா வியாபாரத்தில் ஓடிடி உரிமை ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

அதேபோல், மற்ற மொழி உரிமைகள், வெளிநாட்டு வசூல், இசை உரிமை ஆகியவற்றிலும் தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்கும். ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் நடித்தால் அதற்கு ஒரு விலை, சின்ன நடிகர்கள் எனில் அதற்கு ஏற்பவிலை என மாறுபடும். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் படங்களின் அறிவிப்பு வெளியாகிவிட்டாலே அனைத்து உரிமைகளும் பேசி முடிக்கப்பட்டு விருகிறது.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

அதாவது, படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்து விடுகிறது. இதை சினிமாவில் டேபிள் பிராஃபிட் என சொல்வார்கள். ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ஹிந்தி மொழி உரிமை 14 கோடிக்கு விலை போனது. இப்போது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.15 கோடி விலை போயிருக்கிறது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் ஹனிமூன்தான்!.. ஓப்பனாக பேசிய ரஜினி…

 

Related Articles

Next Story