போனியாகாத லால் சலாம்!.. தள்ளிப்போகும் ரிலீஸ்?!... இது என்னடா ரஜினி படத்துக்கு வந்த சோதனை..
Lal Salaam: ஜெயிலர் பட வெற்றிக்கு பின் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த திரைப்படம்தான் லால் சலாம். கிரிக்கெட் விளையாட்டில் அரசிலும், மதமும் எப்படி விளையாடுகிறது என்பதை அடிப்பையாக வைத்து இப்படத்தை ஐஸ்வர்யா உருவாக்கியிருக்கிறார்.
இப்படத்தில் கிரிக்கெட் வீரர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்துள்ளனர். இந்த படத்தில் கெஸ்ட் ரோல் என்றாலும் ரஜினிக்கு முக்கிய வேடம் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங்குக்கு பல மணி நேரம் லேட்டா வந்த கமல்! திட்டமுடியாமல் தவித்த கே.பி – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
லால் சலாம் படத்தை பொங்கலுக்கு கொண்டுவந்துவிட ஐஸ்வர்யா திட்டமிட்டார். ஆனால், பல பிரச்சனைகளால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. பொங்கல் ரேஸிலிருந்து அரண்மனை 4 உள்ளிட்ட சில படங்கள் வெளியேறிவிட லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், அயலான் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது ஓடிடி மூலம் லால் சலாம் படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் வந்துள்ளது. இப்போதெல்லாம் ஒரு படம் உருவானால் முதலில் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றை விற்ற பின்னரே தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். ஏனெனி்ல் இது இரண்டும் சேர்த்து தயாரிப்பாளருக்கு பல கோடிகள் கிடைக்கும்.
இதையும் படிங்க: கடுப்பில் கத்திய விஜய்… சபதம் எடுத்த பிரபல நடிகர்… எந்த படத்துலனு தெரியுமா?…
அந்த பணத்தை வாங்கித்தான் நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய மீதி சம்பளம், ஃபைனான்ஸியரிடம் வட்டிக்கு வாங்கிய பணம் என எல்லாவற்றையும் செட்டில் செய்வார்கள். ஆனால், லால் சலாம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கிவிட்ட நிலையில் சேட்டிலைட் உரிமை(ஓடிடி) இன்னும் விற்கப்படவில்லை.
எனவே, லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஒரேவேளை சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையெனில் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: வளர்த்துவிட்டவரையே வெட்ட கூடாது… விஷால் மீது ஆவேசமாகும் தருண் கோபி… இவ்ளோ நடந்துருக்கா!…