படம் ரிலீஸே ஆயிடுச்சி!.. இன்னும் போனி ஆகல!. அப்செட்டில் ரஜினி!.. இதெல்லாம் பாவம் மை லார்ட்…
Rajinikanth: ரஜினிகாந்த் போல கோலிவுட்டின் உச்ச நட்சத்திரத்துக்கே ஓடிடி நிறுவனம் போட்டு இருக்கும் ஒரு கண்டிஷனால் ரசிகர்களே அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அப்போ இனி எல்லா படமுமே போனி ஆகாத நிலை உருவாகி இருக்கிறது. கோலிவுட்டின் வியாபாரமும் படு பாதாளத்துக்கு செல்ல இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் லால் சலாம். மகளுக்காக பெரிய வசூல் படத்தினை கொடுத்த ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய தைரியமான விஷயம் தான். அப்படி இருக்க இப்படத்தில் அவரின் காட்சிகளே அதிகம். அவர் இல்லை விக்ராந்த் தான் கேமியோ என பல தரப்பட்ட சர்ச்சைகள் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் சைரன் சத்தமா ஒலித்ததா? இல்லை சங்கு ஊதியதா?.. இதோ ட்விட்டர் விமர்சனம்!
இப்படி இருக்க எப்போ படம் ஓடிடியில் வரும் என எதிர்பார்த்து இருந்தனர். இப்போ அதிலும் ஒரு சிக்கல் வந்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு தொகையை முடிவு செய்து ஓடிடி நிறுவனங்கள் படத்தினை வாங்கிவிடும். அதுவும் முன்னணி நடிகர்கள் திரைப்படம் என்றால் இன்னும் அதிக தொகை கிடைக்கும்.
இப்போ இருக்கும் தொடர் தோல்வி லிஸ்டால் எந்த படத்துக்குமே தொகையெல்லாம் நிர்ணயிக்க முடியாது. வேண்டும் என்றால் படத்தினை வாங்கிக்கொள்கிறோம். ஒரு வாரம் படம் ஓடட்டும். அதை வைத்து ஒரு தொகையை முடிவு செய்து கொள்ளலாம் என்கின்றனராம். இதே பிரச்னையில் தான் லால் சலாமும் சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா
நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனங்கள் இரண்டுமே போட்டியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் ரஜினிக்கே இந்த நிலைனா சின்ன பட்ஜெட் படங்கள் என்ன ஆகும் என்ற பேச்சு உருவாகி இருக்கிறது.
இந்த தொகையை வைத்து நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்த தயாரிப்பு நிறுவனங்களும் நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளத்தினை கொடுக்க முடியாத நிலை கோலிவுட்டில் நிலவுகிறது. இதனால் தெலுங்கு நிறுவனங்கள் கோலிவுட்டில் ஆதிக்கத்தினை கையில் எடுத்து இருப்பதும் அதிர்ச்சி தகவலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: ஜெயம் ரவியோட இந்த படமாவது தியேட்டர்ல பார்க்குற மாதிரி இருக்குதா?.. சைரன் விமர்சனம் இதோ!..