Connect with us

Cinema News

மகள் வேற தொழில் வேற… கறாராக சம்பளத்தை கேட்டு வாங்கிய ரஜினிகாந்த்.. அதுக்குனு இத்தனை கோடியா?

Lal salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரிய தகவலாக பரவி வருகிறது. மகளிடம் கூட இப்படி கறாராக இருக்காரே சூப்பர் ஸ்டார் எனவும் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் தமிழக கிராமங்களில் இருந்து கிரிக்கெட் ஆட வரும் வீரர்கள் குறித்து பேசப்பட இருக்கிறது. நன்றாக கிரிக்கெட் விளையாட தெரிந்த நடிகர்களை ஐஸ்வர்யா தேடி கண்டுப்பிடித்தார்.

இதையும் படிங்க:இந்த பிரபல நகைச்சுவை நடிகரின் பேரன்தான் ஜெயம் ரவியா? இது தெரியாம போச்சே!..

அந்த வகையில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பார் எனக் கூறப்பட்டது. முதலில் அவரின் காட்சிகள் சில நிமிடங்கள் தான் இடம் பெற வைக்கும் முடிவில் இருந்தார்களாம்.

ஆனால் ஜெய்லர் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் அவர் போர்ஷனை இரண்டாம் பகுதி முழுவதும் வைக்க படக்குழு திட்டமிட்டார்களாம். அந்த வகையில் முஸ்லீம் வேடத்தில் விஷ்ணுவிஷாலின் தாய் மாமனாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க:யுத்தத்தை விட ரத்தத்துக்குத்தான் அதிக பவர்! ஒரே நிமிஷத்துல தட்டி தூக்கிய லோகேஷ்! பரிதவிக்கும் ‘ரஜினி170’

படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட் முடிவினை எட்டி இருக்கும் நிலையில் படக்குழு லால் சலாமை டிசம்பர் 8ந் தேதி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இப்படத்தில் 20 நிமிடத்துக்கு அதிகமாக வரும் ரஜினிகாந்த் சம்பளமாக 40 கோடி வரை வாங்கி இருக்கிறாராம்.

கெஸ்ட் ரோலில் கொஞ்சமாக நடித்து கொடுத்தால் சம்பளம் வராது என நினைத்த தயாரிப்பு குழு மகள் படத்துல கூட இப்படியா எனக் கடுப்பில் இருக்கிறதாம். சின்ன பட்ஜெட் படத்தில்  இவரின் சம்பளம் மட்டும் பட செலவினை தொட்டு விட்டதாகவும் குறை பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top