இந்த பிரபல நகைச்சுவை நடிகரின் பேரன்தான் ஜெயம் ரவியா? இது தெரியாம போச்சே!..

இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வரும் இரு பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அவரது அண்ணனான மோகன் ராஜா. ஒரு பக்கம் நடிப்பில் அசத்தி வரும் ஜெயம் ரவி இன்னொரு பக்கம் டைரக்ஷனில் திறமையை நிரூபித்து வரும் மோகன் ராஜா.

இந்த இருவரையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபல எடிட்டரான மோகன். எடிட்டர் மோகன் பல திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இவருடைய வாழ்க்கை பின்னணியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!

எடிட்டர் மோகன் சிறு வயதில் இருக்கும் போதே சினிமா மீது இருந்த காதலால் சென்னைக்கு 13-வது வயதிலேயே கிளம்பி வந்திருக்கிறார். யாரையும் தெரியாது. நேராக பாண்டி பஜாருக்கு சென்றாராம். அங்கு அப்பொழுதுதான் புதியதாக வீடு வாங்கி குடி பெயர்ந்திருக்கிறார் பிரபல பழம்பெறும் நகைச்சுவை நடிகரான தங்கவேலு.

ஜின்னா என பெயர் கொண்ட மோகன் நேராக தங்கவேலு வீட்டிற்கு சென்றாராம். அவரை நன்கு விசாரித்து தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார் தங்கவேலு. மோகனின் பேச்சு, சுறுசுறுப்பு என தங்கவேலுவுக்கு பிடித்துப் போக அவர் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவருடைய முதல் மனைவியான ராஜாமணி அம்மாளும் மோகன் மீது அதிக அன்பு கொண்டவராகவும் இருந்தாராம். ஒரு கட்டத்தில் மோகன் மீது இருவரும் மாறி மாறி அன்பு மழை பொழிந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : அடேங்கப்பா!.. ஷங்கர் ஸ்கேனிங் செய்த இடத்தில் விஜய்!.. இந்தியன் 2 ரேஞ்சுக்கு சென்ற தளபதி 68!..

தங்கவேலுவுக்கும் ராஜா மணி அம்மாளுக்கும் குழந்தை இல்லாததால் இந்த மோகனையே தத்து பிள்ளையாக வளர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தங்கவேலுவும் அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் இதைப்பற்றி ஆலோசித்து அதன் பிறகு ஜின்னா என பெயர் கொண்ட அந்த சிறுவனை மோகன் என பெயர் சூட்டி தன் பிள்ளையாகவே வளர்த்து வந்தாராம் தங்கவேலு.

பழம்பெரும் நகைச்சுவை நடிகரான தங்கவேலுவின் வளர்ப்பு பிள்ளையாகவே வளர்ந்திருக்கிறார் மோகன். இவருடைய வாரிசுகள் தான் மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: வில்லன தேடி நான் போறேன்! அடுத்த வேட்டைக்கு தயாரான ஜெயம் ரவி – ‘தனி ஒருவன் 2’வில் மிரட்டப் போகும் நடிகர்

 

Related Articles

Next Story