அடேங்கப்பா!.. ஷங்கர் ஸ்கேனிங் செய்த இடத்தில் விஜய்!.. இந்தியன் 2 ரேஞ்சுக்கு சென்ற தளபதி 68!..

மாநாடு படத்தை விட மிரட்டலாக ஒரு படத்தை நடிகர் விஜய்க்காக இயக்குநர் வெங்கட் பிரபு தயார் செய்து வருகிறார் என்பது அதன் ஆரம்ப கட்டத்திலேயே தெரிகிறது. லியோ படத்தின் ஹைப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தளபதி விஜய் தாறுமாறாக Lola VFX மையத்தில் ஃபுல் ஸ்கேனிங் செய்யும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன.

பீஸ்ட் படத்தின் பேட்டியின் போதே தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றை பெருசா செய்ய வேண்டும் என விஜய் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: வானத்தை போல விஜயகாந்தையே ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. விஜய் உருவாக்கிய அன்பு தம்பிகள்!.. வைரலாகும் வீடியோ மீம்!..

இந்நிலையில், அவரது வேட்கைக்கு தீனி போடும் விதமாக தளபதி 68 படத்தில் விஜய் வயதான தோற்றத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது இன்னும் இளமையாக மாறப்போகிறாரா என ஏகப்பட்ட கேள்விகள் தற்போது கிளம்பி உள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு தடையாக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் கட்டையை போட்டு வருவதாக எல்லாம் கூறப்பட்டது.

இதையும் படிங்க: விஜயை தொடர்ச்சியாக இயக்க காத்திருக்கும் டாப் இயக்குனர்கள்.. அப்போ அரசியல் எண்ட்ரி அம்போவா! என்னப்பா இது!

ஆனால், அதையெல்லாம் தற்போது விஜய் கண்டு கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளம்பி போயுள்ளார். அங்கே ஹாலிவுட் நடிகர்களை இளமையாக்கும் அற்புதமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Lola VFX மையத்தில் நடிகர் விஜய் ஸ்கேனிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

முன்னதாக இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்துக்காக லோலா விஎஃப்எக்ஸ்க்கு சென்ற நிலையில், எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அதே போன்ற போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில், தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காக மாறி உள்ளது.

 

Related Articles

Next Story