More
Categories: Cinema News latest news

மூன்று மதங்களை ஒன்றிணைத்த லால் சலாம்!.. வேலூர் ரசிகர்கள் பண்ண தரமான சம்பவம்!..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் வெளியாவதை முன்னிட்டு வேலூரில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் மதநல்லிணக்கத்தை கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொரு மதமும் மக்களை இறைவனை அடைய உருவாக்கப்பட்ட ஒரு வழி தான். அனைத்து மதங்களும் உயர்ந்த ஒன்று தான். எல்லா கடவுள்களும் தத்துவத்தின் பொருள் தான் என பேசியிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கேமியோ ரோலில் கூட மாஸ் காட்டிய ரஜினிகாந்த் படங்கள்… இத நோட் பண்ணீங்களா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது என்னுடைய தந்தை சங்கி இல்லை என்றும் அப்படி இருந்தால் அவர் மொய்தீன் பாயாக நடித்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.

இந்நிலையில், வேலூரில் உள்ள மூன்று மதங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பு பாராட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தளபதி 69 படம் இப்படித்தான் இருக்கும்!.. அவர் கூட அரசியலில் பயணிக்கவும் ரெடி.. பிரபலம் ஓபன் டாக்!..

இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் தமிழ்நாட்டில் இதே போல எப்போதும் ஒன்றாகவே இருப்போம் என்றும் எங்களை சாதி, மத பேதத்தால் யாரும் பிரிக்க முடியாது என்பதை தெளிவாக சொல்லி உள்ளனர். மேலும், லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், சரண் ராஜ், தம்பி ராமைய்யா, கபில் தேவ், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Published by
Saranya M

Recent Posts