கடைசி நேரத்தில் எம்ஜிஆர் பட க்ளைமாக்ஸில் ஏற்பட்ட குழப்பம்!.. கை தேர்ந்த இயக்குனர்.. என்னாச்சு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அந்த ஆளுமையில் ஒரு எளிமை, அன்பு, பாசம், அக்கறை, சமூக சேவை என அனைத்தையும் வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் எம்ஜிஆர்.
அதுவே பிற்காலத்தில் தமிழத்தை ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டார். எம்ஜிஆர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை ஒரு போதும் தவறவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதே நேரம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் முன்னாடி நின்று பேசவே சிலர் பயப்படுவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் போக அவர் நடிக்கிற படங்களில் அமைந்த பாடல்கள் ஆகட்டும், சீன் ஆகட்டும் எம்ஜிஆரிடம் சென்று பரிசீலனை செய்த பிறகே திரையில் படமாக வெளியாகும். ஏனெனில் மக்களிடையே கொண்டு செல்கின்ற படம் வெறும் படமாக இல்லாமல் அவர்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு செல்கின்ற கருவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எம்ஜிஆரின் ஈடுபாடு அவரது படங்களில் கண்டிப்பாக இருக்கும்.
இந்த நிலையில் எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த படமான ‘ஒளிவிளக்கு’ திரைப்படம். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி, ஜெயலலிதா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்போது இந்த படத்தை ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனர் லட்சுமணன் தான் வாங்கியிருந்தாராம்.
படத்தின் முதல் பிரதியை போட்டு பார்த்த அந்நிறுவனர் படத்தின் க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லியிருக்கிறார். படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.வாசன். அதற்கு இயக்குனர் ‘ஏன்? எது பிடிக்கவில்லை’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு லட்சுமணன் ‘படத்தின் கதைப்படி சௌகார் இறந்து போக அவருக்கு எம்ஜிஆர் மாலை போடுகிறார், அதுவே தவறு, மேலும் சௌகார் ஏற்கெனவே வேறொரு கணவரால் கைவிடப்பட்ட பெண், அப்படி இருக்கும் போது எம்ஜிஆர் மாலையிடுவது என்பது சரியாக இருக்காது’ என்று கூறினாராம்.
உடனே எஸ்.எஸ்.வாசன் எம்ஜிஆரிடம் இதைப் பற்றி பேசி எம்ஜிஆரும் லட்சுமணன் கருத்துக்கு உடன்பட க்ளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் எடிட் செய்து தான் வெளியிட்டார்கள். இப்ப கூட அந்தப் படத்தை பார்த்தாலும் சௌகார் மரணத்திற்கு எம்ஜிஆர் , ஜெயலலிதா இருவரும் மாலையை கொண்டு செல்கின்ற மாதிரி காட்டியிருப்பார்கள், அடுத்த ஷார்ட் சௌகார் கழுத்தில் மாலை இருக்கிற மாதிரி காட்டியிருப்பார்கள், ஆனால் யார் மாலையை போட்டது என்பதை காட்டியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குழப்பத்தில் ஒளிவிளக்கு படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.
இதையும் படிங்க : ஆங்கிலம் தெரியாது என்ற கர்வத்தில் இருந்த தயாரிப்பாளர்!.. எண்ணத்தை தவிடு பொடியாக்கிய எம்ஜிஆர்..