தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது துருவ நட்சத்திரம் திரைப்படம்தான். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படம் இன்னும் ரிலீஸாகாமல் சில பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இந்தப் படம் மட்டும் இல்லை. இதே போல் எத்தனையோ பல திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் விக்ரம் நடித்த திரைப்படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே ஹைப் இருக்கிறது. இதை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கௌதம் மேனன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யாவாம். அதன் பிறகுதான் சில மாற்றங்களை செய்து விக்ரம் இந்தப் படத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
இந்த படம் சில பொருளாதார நெருக்கடியாலும் சட்ட ரீதியான பிரச்சினையாலும் சிக்கி வெளியாகாமல் இருந்திருக்கின்றது. இப்போதுதான் அந்தப் பிரச்சினையை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறார்களாம்.இன்னும் சட்டரீதியான பிரச்சினை தான் இருக்கிறதாம். அதையும் இனி வரும் வாரங்களில் முடித்து விடுவார்களாம்.
இத்தனை வருடங்களில் இந்தப் படத்தை நான் கடந்து போயிருக்கலாம். ஆனால் இந்தப் படத்திற்காக நிறைய சவால்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்த படங்களையும் இயக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆகி அதற்கான ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்க்கவே நான் விரும்புகிறேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…