நடிகர்களின் 100வது படங்கள்... வெற்றி, தோல்வி யார் யாருக்கு கிடைச்சது...? வாங்க இதுல பாக்கலாம்...!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் 100 படங்களை தாண்டி நடித்திருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபுதேவா சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் 100 படங்களை கொடுத்திருக்கிறார்கள். இதில் எந்த நடிகர்களுக்கு 100வது திரைப்படம் வெற்றி படமாக அமைந்திருக்கின்றது. எந்த நடிகருக்கு தோல்வி படமாக அமைந்திருக்கின்றது என்பதை தான் இதில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் 100 படங்கள் என்பது ஒரு மிகப்பெரிய விஷயம் தான். இன்றைய சூழலில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள் என்ட்ரி கொடுப்பதால் டாப் நடிகர்கள் ஓரம் கட்டப்பட்டு விடுகிறார்கள். இருப்பினும் சில நடிகர்கள் இப்போதும் வயது தாண்டி சாதித்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த் , கமலஹாசன் போன்ற நடிகர்களை நாம் கூறலாம்.
பொதுவாக நடிகர்கள் தங்களது 100வது திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் வெற்றி, தோல்வி என்பது ரசிகர்கள் கையில் தான். இதில் நாம் முதலாவதாக பார்க்கபோவது எம்.ஜி.ஆர். இவரின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு. இந்த படத்தை சாணக்கியன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்ததாக சிவாஜி கணேசனின் 100வது திரைப்படம் நவராத்திரி. இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 9 கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருப்பார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. காதல் மன்னன் ஜெமினி கணேசனின் 100வது திரைப்படம் சீதா. பல வெற்றி படங்களை ஜெமினி கணேசன் கொடுத்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு தோல்வியை தான் கொடுத்தது.
அடுத்ததாக மக்கள் கலைஞன் ஜெய்சங்கர் இவரின் 100வது திரைப்படம் பிள்ளை செல்வம். இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக நவரச திலகம் முத்துராமனின் 100வது திரைப்படம் இன்ஸ்பெக்டர் மனைவி. இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100வது திரைப்படம் ஸ்ரீ ராகவேந்திரா. ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவரின் 100வது திரைப்படம் தோல்வியை தான் கொடுத்தது. உலகநாயகன் கமலஹாசனின் 100வது திரைப்படம் ராஜ பார்வை. இந்த படமும் கமலஹாசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
நடிகர் சிவகுமாரின் 100வது திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக விஜயகாந்தின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்தின் மூலமாக தான் விஜயகாந்த் கேப்டன் என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். விஜயகாந்த் இப்படம் இவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது.
அடுத்ததாக சத்யராஜ் இவரின் 100வது திரைப்படம் வாத்தியார் வீட்டுப்பிள்ளை. இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றி படமாக அமையவில்லை. இளைய திலகம் பிரபு இவரின் 100வது திரைப்படம் ராஜகுமாரன். இந்த படமும் பிரபுவுக்கு வெற்றி படமாக அமையவில்லை. நவரச நாயகன் கார்த்திக் 100வது திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ஆக்சன் கிங் அர்ஜுனின் 100வது திரைப்படம் மன்னவரு சின்னவரு . இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி படமாக அமையவில்லை. அடுத்ததாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 100வது திரைப்படம் தலைமகன். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.