More

12 பேர் இறந்துவிட்டார்கள் – லீவுக்காக வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர்கள் கைது !

கொரோனா வைரஸ் பரவலால் 12 பேர் இறந்துவிட்டதாக போலி செய்தியை பரப்பியவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக மக்களை தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லியில்

கொரோனா வைரஸால் 12 பேர் இறந்து விட்டதாகவும், அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.இதையடுத்து பீதி உண்டானதை அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வதந்தியைப் பரப்பியவர்களான பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் கார் கம்பெனியில் விடுமுறை அளிக்காததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts