">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மகாராஷ்டிராவில் to நாமக்கல் ; 500 கி.மீ நடைபயணம் – பாதியிலேயே உயிரிழந்த இளைஞர்!
மகாராஷ்டிராவில் இருந்து நாமக்கல் நோக்கி நடந்தே வந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் பலியாகியுள்ளார்.
நாடெங்கும் கொரொனா அதிகமாகி வருவதால் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு பல நூறு கிலோமீட்டர்களை மக்கள் நடந்தே செல்கின்றனர்.
அதுபோல மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்த லோகேஷ் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் நடந்தே 1300 கிலோமீட்டரை நடந்து செல்ல திட்டமிட்டுள்ளனர். 500 கிலோமீட்டர்களைக் கடந்த நிலையில் அவரகளை செகந்திராபாத் போலீஸார் தடுத்து அங்குள்ள முகாமில் அடைத்து வைத்திருந்தனர். அப்போது லோகேஷுக்கு திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மரணமடைந்த லோகேஷ் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.