">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
14 நாட்களில் 7 லட்சம் பேர் வேலை இழப்பு – ஆபத்தான நிலையில் அமெரிக்கா!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 14 நாட்களில் 7 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். தற்போதைய நிலவரப்படி அங்கு 2.77 லட்சம் பேரை வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைப் பலமடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடந்த 14 நாட்களில் அமெரிக்காவில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மே இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சிறுதொழில் செய்வோர் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் சதவீதம் 3.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த மாதத்தில் சுமார் ஒரு கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.