போற போக்க பாத்தா உலகநாயகனே மிஞ்சிருவாரு போலையே... பாவம்பா நம்ம அஜித்... ஆனா அந்த செலவு தான்...

by ramya suresh |

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித் தற்போது ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் 1997 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது. இதற்கான முழு உரிமையையும் வாங்கிவிட்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள்.

இதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. அந்த திரைப்படத்தை எடுப்பதற்கு எதற்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். அதற்கு இங்கேயே படத்தை எடுத்திருக்கலாமே என்று பலரும் பலவிதமாக கூறி வந்தார்கள். இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

விடாமுயற்சி படத்தை பிரேக் டவுன் என்ற படத்தை காப்பி எடுத்து அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒரு ஆங்கில படத்தின் தழுவலுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டும். அந்த காலத்தில் கமலஹாசன் தான் அதிக அளவு ஆங்கில படங்களை இன்ஸ்பையராக வைத்து படங்களை எடுத்த நடிகர். அதனால்தான் அவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள்.

அவர் நடித்த அவ்வை சண்முகி, மகாநதி, சதிலீலாவதி உள்ளிட்ட பல படங்களை கூறிக் கொண்டே போகலாம். கமலஹாசன் நடித்த திரைப்படங்களில் பாதிக்கு பாதி திரைப்படங்கள் ஆங்கிலப் படங்களை இன்ஸ்பையராக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான். அதற்கு அடுத்ததாக அஜித் இருக்கின்றார். இவரின் துணிவு திரைப்படமும் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் அதுபோன்ற ஒரு கதை தான் என்று கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது" என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Next Story