இருவாழைப்பழம்… ஒன்றில் மட்டும் விஷம் – காதலியைக் கொன்ற காதலன் !

Published On: December 23, 2019
---Advertisement---

f7c0741943952328e196cda80ac96ecd

கும்பகோணம் அருகே காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் அவருக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் என்ற பெண் தனியார் ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது.

இந்நிலையில் தமிழ், வேறு ஒருவரோடு பழகுவதாக அய்யப்பன் சந்தேகம் அடைந்துள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து செல்லும் போது சேஷ வாடி என்ற இடத்தில் இருவரும் இது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர்.

அதற்காக அய்யப்பன் இரு வாழை பழங்களை வாங்கி அதில் எலி மருந்துகளை கலந்து வைத்திருப்பதாக சொல்லி தமிழை சாப்பிட்டு சொல்லியுள்ளார். அதன்பிறகு தான் சாப்பிடுவதாக சொல்லியுள்ளார். இதை நம்பி தமிழ் வாழைப்பழத்தை சாப்பிட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அய்யப்பன் தனது வாழைப் பழத்தை சாப்பிடாமல்  தலைமறைவாகியுள்ளார். விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட தமிழ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அய்யப்பனைக் கைது செய்துள்ளனர்.

Leave a Comment