">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
100 கி.மீ தூரம் நடந்து சென்ற சிறுமி மயங்கி விழுந்து பலி….
ஊரடங்கு காரணமாக வாகனம் எதுவும் கிடைக்காததால் 100 கி.மீ தூரம் நடந்து சென்ற சிறுமி மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரிந்த வரும் பலரும் வாகனம் இல்லாததால் நடந்தே வரும் செய்திகள் சமீப நாட்களாக பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், ஜமோலோ மட்கம் என்கிற 12 வயது சிறுமி தெலுங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி 3 நாட்களாக நடந்து வந்துள்ளார்.அதன்பின் சாலையிலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தாள். திய உணவு கிடைக்காமல் நீர்ச்சத்து குறைந்து சிறுமி மரணம் அடைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக சட்டீஸ்கர் முதல்வர் அறிவித்துள்ளார்.