உறவினர்களுக்கு கறிவிருந்து வைத்த பெண்… ஆனால் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை – திருப்பத்தூர் கொடூரம் !

by adminram |

c1701a5600499a3cb3682d89b114adf4

திருப்பத்தூரில் கர்ப்பமாக இருந்த ரேவதி என்ற பெண் உறவினர்களாலேயே கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சுட்டக்கொண்டா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மகேஸ்வரன் மற்றும் ரேவதி. மகேஸ்வரன் பெங்களூரில் வேலை செய்வதால், அவரது மனைவி ரேவதி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் ரேவதியை பார்க்க அவரது உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற ரேவதி அவர்களுக்கு கறி விருந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் ரேவதிக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வர வீட்டில் இருந்ததால் சிக்னல் கிடைக்காததால் வெளியில் சென்று பேச சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது மலையடிவாரத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு நிலையில் சடலமாக ரேவதி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேவதியின் வீட்டுக்கு வந்த உறவினர்களான சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் நகைக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story