தனுஷ்கோடி போலிஸாருக்கு அமீர்கான் செய்த உதவி !

Published On: December 26, 2019
---Advertisement---

bed28d6d94fdc68a3a53947364acb09b

தனுஷ்கோடி போலிஸார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கான லால்சிங் சிட்டா எனும் படத்தில் அமீர்கான் நடித்து வருகிறார். இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷ்கோடியில் நடக்க, ஆமிர்கான் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ்கோடி போலிஸார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொள்ள அமீர்கானை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமீர்கான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதை மகிழ்ச்சியாக வாழ போதையிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ எனப் பேசினார்.

Leave a Comment