More

சண்டைக்காட்சியில் விபத்து.. ஐ.சி.யூ வார்டில் பிரபல நடிகர்….

மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் முக்கியமானவர் டொவினோ தாமஸ். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இவருக்கென ரசிகர் வட்டாரமும் உருவாகியுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், அவரது வாழ்வில் சோகமான சம்பவம் நடந்துள்ளது.  காலா என்கிற படத்தின் படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்ட போது, ஒரு சண்டைக்காட்சி படம் பிடிக்கப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் பலமான அடி பட்டுவிட்டது. இதனால், வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

இதனையடுத்து, படப்பிடிப்பு குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published by
adminram