விஜய்க்காக அஜீத் அதை நிச்சயம் செய்திருப்பார்... பிரபலம் சொல்லும் சூப்பர் தகவல்

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து நடிகர் விஜயை அனைத்துத் தரப்பினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவரது ஒவ்வொரு செயலும் எதை நோக்கி நகர்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2 கட்டமாகக் கலந்து கொண்டு விஜய் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் அலசப்படுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா....
நடிகர் விஜயும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். சினிமாவில் தான் அவர்களுக்குள் போட்டியே தவிர நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை. இருவரும் தங்கள் படங்கள் நல்லா ஓடினால் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வர். அதே போல அஜீத்தின் குடும்ப நண்பர் தான் விஜய். அதனால் சமீபத்தில் ஷாலினி உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கூட விஜய் நலம் விசாரித்து இருப்பார். ஏ.எல்.விஜய் கூட ஒரு பேட்டியில் பேசும்போது தலைவா படத்தின் பர்ஸ்ட் லுக்கைப் பார்த்து விட்டு அஜீத் விஜயைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதே போல விஜய் தற்போது முழுநேர அரசியலில் இறங்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக நீட் தேர்வு பற்றியும், மாநிலக் கல்விக் கொள்கை பற்றியும் விஜய் பேசியதை பார்க்கும்போது அவருக்கு பின்னாடி நல்ல ஆலோசகர்கள் இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதுபோன்ற பேச்சுகள் விஜயிடம் இருந்து வரும்போது அதற்கு நல்ல ரீச் இருக்கும். அதனால் அஜீத்தும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பார். கண்டிப்பாக விஜயைப் பாராட்டி இருப்பார்.
விஜய் மாநாடு நடத்துவதற்கு முன்பாகவே இப்படி பேசுவது என்பது அவருக்கு அரசியல் ரீதியாக நல்ல ஆலோசகர்கள் இருப்பதைத் தான் காட்டுகிறது. அதே போல விஜய் 69 அக்டோபரில் சூட்டிங் ஸ்டார்ட் பண்றாங்க. அதற்குப் பிறகு விஜய் தன்னோட அரசியல் பயணத்தோட அத்தனை விஷயங்களையும் மாநாட்டில் கொண்டு வந்து விடுவார். அரசியலில் அவர் என்ன பேச வேண்டும் என்ற வரைவு திட்டம் ரெடியா இருக்கு. அதற்கான ஆலோசகர்கள் இருக்காங்க. அதைத் தான் அந்த மாநாட்டில் பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.