எல்லாத்துக்கும் நான்தானா?!.. நான் யாருன்னு சிவனுக்கு தெரியும்!.. சீறும் தனுஷ்!...
சிம்பு என்றால் எப்படி அவர் சரியாக படப்பிடிப்புக்கு போகமாட்டார் என்கிற கெட்டப்பெயர் அவர் மீது இருக்கிறதோ அது போல தனுஷ் என்றால் அவரால் பலரின் வாழ்வில் விவாகரத்து நடந்திருக்கிறது என்கிற பெயர் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் எனில் தனுஷின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலரும் ஒரு கட்டத்தில் தங்களின் ஜோடியை பிரிந்துவிடுவார்கள்.
அதோடு, பிரபலங்கள் பிரியும்போது அதற்கு காரணம் தனுஷ் என்கிற செய்தி கிளம்பும். பல ஊடகங்களும் அப்படி செய்தி வெளியிடுவார்கள். தனுஷுடன் நெருங்கி பழகியவர் அமலாபால். விஐபி படத்தில் தனுஷுடன் நெருங்கி நடித்தும் இருப்பார். அதன்பின் இயக்குனர் ஏல்.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலாபால்,
ஆனால், அந்த திருமணம் சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை. தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்த திரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனது. விஜய் டிவி தொகுப்பாளர் டிடி (திவ்ய தர்ஷினி) தனது கணவரை பிரிந்தார். இப்போது வரை அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்த விஜய் யேசுதாஸும் தனது மனைவியை பிரிந்தார். சமீபத்தில் ஜிவி பிரகாஷும் அவரின் மனைவியை பிரிந்தார். ஆர்.ஜே மற்றும் பாடகி சுசித்ராவும் தனுஷுன் நட்பு பட்டியலில் இருந்தவர்தான். இவரும் அவரின் கணவர் கார்த்திக்கை பிரிந்தார். சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் தனுஷ் பற்றிய பல செய்திகள் டிவிட்டரில் வெளியாகி பரபரப்புகளை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிகிறார் என்கிற செய்தி வெளியானபோதும் அதில் தனுஷின் பெயர் அடிபட்டது. எல்லோரின் பின்னணியிலும் தனுஷ் இருப்பதாகவே கிசுகிசு வெளியானது. ஆனால், இதற்கும் தனுஷுக்கும் சம்பந்தம் இல்லை என சிலர் சொன்னார்கள். ஆனால், இதையெல்லாம் தனுஷ் கண்டுகொள்வதில்லை. இதுபற்றி அவர் எந்த விளக்கமும் கொடுப்பதில்லை..
இந்நிலையில், ராயன் பட விழாவில் இதற்கெல்லாம் பதில் சொன்ன தனுஷ் ‘நான் யாரென்று சிவனுக்கு தெரியும். என் அம்மாவு அப்பாவுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என தத்துவம் பேசி இருக்கிறார். இப்போது இந்த விவகாரம் டிவிட்டரில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.