அந்த சீன்ல வேணான்னு சொன்னேன், அவர கண்டபடி திட்டிட்டேன்... கேப்டன் குறித்து மனம் திறந்த பொன்னம்பலம்...!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராகவும், கொடூர வில்லனாகவும் வலம் வந்தவர் பொன்னம்பலம். தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், ஸ்டண்ட் மேனாகவும் பணியாற்றி இருக்கின்றார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகின்றார். பின்னர் சினிமாவிலிருந்து விலகிய இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கே மிக பரிதாபமாக இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ செலவை கவனிக்க முடியாமல் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் உதவி செய்து இருந்தார்கள். இதையடுத்து உடல்நலம் தேறிய இவர் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

தனது திரைப்பயணம் குறித்தும், அதில் நடந்த பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். இவர் விஜயகாந்த் குறித்தும் அவர் சினிமாவில் தனக்கு செய்த உதவிகள் குறித்தும் தொடர்ந்து பேசியிருந்தார். அதில் தெரிவித்திருந்ததாவது: "எனக்கு தலையில் அடித்தால் கோபம் வரும். விஜயகாந்த் படத்தின் போது ஒரு சீனில் என் தலையில் படுவது போல் ஒரு பல்டி அடிக்க வேண்டும்.

நான் வேண்டாம் என்று முதலில் மறுத்தேன். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அந்த சீனை எடுத்தார்கள். அப்போது என் தலையில் அடிபட்டு எனக்கு பிபி அதிகமாயிடுச்சு. பிறகு கண்டபடி திட்டிவிட்டேன். அப்புறம் என்னை ரூமுக்கு கூட்டிட்டு போய் சரக்கு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினார் விஜயகாந்த்" என்று கூறியிருக்கின்றார்.

Related Articles
Next Story
Share it