பிரசாந்துக்கும், விக்ரமுக்கும் என்ன தான் பிரச்சனை? ஒரே நாளில் இவர்கள் படங்கள் மோத இதுதான் காரணமா?
தமிழ்த்திரை உலகில் 'டாப் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர் பிரசாந்த். அதே போல நடிப்பில் எந்தக் கேரக்டரானாலும் அதை உள்வாங்கி அதுவாகவே மாறி நடிப்பவர் நடிகர் விக்ரம். கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கிடுபவர்.
அவரது முந்தைய படங்களான சேது, பிதாமகன், காசி, ஐ, அந்நியன் போன்ற படங்களைப் பார்த்தாலே இது நமக்குத் தெரிய வரும். இந்த இருவருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை? இவர்கள் இருவரும் உறவினர்களா என பலருக்கும் கேள்வி எழுவதுண்டு. அதற்கான பதிலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
இவர்களுக்குள் பிரச்சனை என்பதை விட நெருங்கிய உறவுகளுக்குள் நடக்கிற ஈகோ பிரச்சனை. ஆக்சுவலா என்னன்னா விக்ரமோட அம்மா வந்து தியாகராஜனோட தங்கை. தியாகராஜனின் சம்மதம் இல்லாமல் விருப்பத் திருமணம் பண்ணிட்டு வந்துடறாங்க. அதுல இருந்து அவங்களுக்குள்ள பேச்சுவார்த்தை இல்லாம இருந்து போச்சு.
அதற்கு அப்புறம் விக்ரம் வளர்ந்த பிறகு அவரா ஒரு நட்பை உருவாக்கிக்கறாரு. நானே பல முறை பார்த்திருக்கேன். சேது படத்துக்கு முன்னாடி எல்லாம் பிரசாந்தைப் பார்க்கப் போகும்போது விக்ரமும் அங்கே வருவாரு. அவங்க வீட்டுல கேஷூவலா சுத்திக்கிட்டு இருப்பாரு. அங்க இங்கன்னு சுத்திக்கிட்டு இருப்பாரு.
பலமுறை அவருக்கு என்னன்னா பிரசாந்த் நடிக்க வந்துட்டாரு. நம்ம மாமா நம்மளையும் நடிக்க வைப்பாரு. அவரே நமக்கு ஒரு வாய்ப்பை வாங்கிக் கொடுப்பாருன்னு எல்லாம் நினைச்சிக்கிட்டே அங்க வந்துருப்பாரு போல இருக்கு.
ஆனா அது நடக்கவே இல்ல. அதுக்குள்ள காலம் விக்ரமைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ வச்சிடுச்சு. பிரசாந்த் மெல்ல மெல்ல டவுன் ஆயிட்டாரு. இவரு அசுர வளர்ச்சி. இன்னிக்கு எல்லாமே மாறியிருக்கும். இப்ப அது இருக்காதுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு விக்ரமுக்கு எதிரா பிரசாந்த் படத்தை இறக்கி விட்டா அவரு படம் காலியாயிடும். அப்படிங்கற அளவுக்கு சினிமா தெரியாதவர் அல்ல பிரசாந்த்.
தியாகராஜனும் சரி. பிரசாந்தும் சரி. விக்ரமுக்குன்னு தனி மார்க்கெட், கூட்டம் இருக்குன்னு அவங்களுக்கும் தெரியும். இருவருக்குமே அவரவர் வசதிக்கு ஏற்ப நல்ல ரிலீஸ் தேதி தேவைப்பட்டதால் தான் வச்சிருக்காங்க. இது எதிர்பாராம ஏற்பட்டது தான். திட்டமிட்டு உன்னை ஒழிச்சிடுறேன் பாருன்னு எல்லாம் வரல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.