நீ என்னை ஏமாத்திட்ட!.. அண்ணாத்த ஷெட்டில் மீனாவுக்கு ஷாக் கொடுத்த ரஜினி….

Published on: May 27, 2021
---Advertisement---

789847289fe5d67f438b4a819fbb3c88

அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. அப்படத்தில் ரஜினி அங்கிள்.. ரஜினி அங்கிள் என அவர் அழைப்பார். அதன்பின்னர் மீனா வளர்ந்து நடிகையான பின் எஜமான் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் முத்து, வீரா, குசேலன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது மீனாவிடம் ‘மீனா நீ என்ன ஏமாத்திட்ட!’ என ரஜினி கூறியுள்ளார். அனைவர் முன்னிலையிலும் ரஜினி இதை கூறவும் மீனா அதிர்ச்சி ஆகிவிட்டாராம். 

72096bdf2932d50681d8e27e1bb9b045-1

பின்னார், நாங்கள் எல்லாம் மாறிட்டோம். எங்கள் முகமெல்லாம் மாறிடுச்சு.. ஆனா நீ மட்டும் இன்னும் வீரா படத்தில் பார்த்தது போலவே இருக்கே’ என ரஜினி கூற மீனா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment