">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் நடிகர் சஞ்சய் தத்!
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சஞ்சய் தத் வில்லன் ரோல்களில் வெளுத்து வாங்குவார். முக பாவனை, உடல் தோற்றம் , மிரட்டலான குரல் என வில்லன் தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தி ஹீரோக்களை மிரட்டியெடுப்பார்.
தற்ப்போது KGF 2 படத்தில் ஆதீரா என்ற முக்கிய வில்லன் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று என வதந்தி பரவிய நிலையில் இது குறித்து ட்விட் பதிவிட்ட நடிகர் சஞ்சய் தத்,
” மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், எனக்கு கொரோனா இல்லை வேறு சில காரணங்களால் மருத்துவமனையில் உள்ளேன். மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து அவர் கூறியது போலவே இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.