சாய்பல்லவிக்கு அந்த மாதிரி டிரஸ் கொடுத்துப்பாருங்க.. ஸ்ரீகாந்த் பேச்சால் மேடையில் பரபரப்பு

by ராம் சுதன் |

நடிகர் ஸ்ரீகாந்த்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் இன்றுடன் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களை நிறைவு செய்கிறார். இந்த 25 வருடங்களில் இன்னும் அவருக்கான இடத்தை தேடி ஓடிக் கொண்டுதான் இருக்கிறார். வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான். தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும்தான். ஆனாலும் வரும் வாய்ப்பை எல்லாம் இன்னும் பயன்படுத்திக் கொண்டு தனக்கான இடத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

சறுக்கல்கள்: ரோஜாக்கூட்டம், மனசெல்லாம் , நண்பன், பூ என இவரது கெரியரில் குறிப்பிட்டு சொல்லும் படியான படங்களே வெற்றியடைந்து இருக்கின்றன. பெரும்பாலும் அதிக தோல்விகளையே பார்த்தவர் ஸ்ரீகாந்த். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் காதல் படங்களாகவே இருந்தன. அதனால் இவரை ஒரு லவ்வர் பாயாகவே ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தனர். திடீரென ஆக்‌ஷன் என இறங்கி தனக்கான குழியை தானே தேடிக் கொண்டார் ஸ்ரீகாந்த்.

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். ரெங்கராஜன் இயக்கிய இந்தப் படத்தின் பெயர் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது கே ராஜனும் கலந்து கொண்டார். கே. ராஜன் பேசும் போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்ப்டத்தையும் தனுஷையும் பங்கம் செய்து விட்டு போனார்.

அதாவது ஒரு ஹோட்டலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடிக்கிறார்கள். இது கலாச்சாரத்தை சீர் குலைக்கிறது என்றெல்லாம் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்ரீகாந்தும் அவருடைய கருத்தை பேசினார். ஆணும் பெண்ணும் சேர்ந்து குடிக்கக் கூடாது என யார் சொன்னது? இதெல்லாம் கலாச்சாரம்னும் யார் சொன்னது? எல்லாம் அவரவர் விருப்பம்.

சாய்பல்லவி: அந்த டிரஸ் போடக் கூடாது. இப்படி இருக்கக் கூடாது என யாருமே சொல்ல முடியாது. இப்போ சாய்பல்லவியை வேறு மாதிரி டிரஸ் போட சொல்லுங்க பார்ப்போம். போட மாட்டாங்க. வேணும்னா அப்படி நோ சொல்ல பழகிக்கோங்க. அவ்வளவுதான். சினிமாவில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. இரண்டு கட்சிகளாக பிரிந்து சங்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒற்றுமை வேண்டும்: இப்படி பிரிவே இருக்கக் கூடாது. சினிமாவிற்கு ஆரோக்கியமே ஒற்றுமைதான். எல்லா சங்கங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். இன்னும் எனக்கு சம்பளம் ஏற்றவில்லை. கடைசி படத்தில் கூட 10 லட்சம் பாக்கி இருக்கிறது. அதுவும் என்னுடைய முழு சம்பளத்தையும் ஒரு தயாரிப்பாளருக்கு திருப்பியும் கொடுத்திருக்கிறேன்.நடிகர்களுக்கு சம்பளத்தை ஏற்றிக் கொடுப்பதே தயாரிப்பாளர்கள்தான். அப்புறம் ஏன் நடிகர்கள் மேல் புகார் சொல்கிறீர்கள்? என கே ராஜனை வெளுத்து எடுத்தார் ஸ்ரீகாந்த்.

Next Story