ரசிகர்களை தாஜா பண்ற வேலையில் இறங்கிய சூர்யா.. இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் டூ மச் தான்...!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா கெரியரை தொடங்கி பல அவமானங்கள், கேலி கிண்டல்களை தாண்டி சாதித்து காட்டி இருக்கின்றார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அடுத்ததாக பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த திரைப்படம் பாதியிலேயே போய்விட்டது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் அப்படத்தின் போஸ்டருடன் அப்படியே நின்று விட்டது. இந்த திரைப்படம் வருமா வராதா என்ற குழப்பத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு இடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டு இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் நம்பியிருக்கின்றார் சூர்யா. ஏனென்றால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்கவில்லை.
இந்த திரைப்படம் வந்து இரண்டு வருடங்களான நிலையில் ஒரு திரைப்படம் கூட நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகாத காரணத்தால் கங்குவா திரைப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக மாற்றிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றார். மேலும் தன்னை ஒரு பான் இந்தியா நடிகராக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பையில் போய் செட்டிலான நடிகர் சூர்யா அங்கு சில திரைப்படங்களில் கமிட்டானதாகவும் ஆனால் அந்த படங்கள் அனைத்தும் டிராப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கங்குவா திரைப்படத்தை வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தனது ரசிகர்களை தாஜா பண்ணும் வேலையில் இறங்கி இருக்கின்றார் நடிகர் சூர்யா என வலைப்பேச்சு பிஷ்மி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் கூறியது போல சமீபத்தில் ரசிகர்களுடன் அதிகம் மிங்கிலாகி வருகின்றார் சூர்யா.
சமீபத்தில் ரத்ததானம் செய்வதற்கு ரசிகர்களுடன் சென்றிருந்தார். அதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகியின் தந்தை உயிரிழப்பிற்கு நேராக சென்று அஞ்சலி செலுத்தினார் என பல விஷயங்களை கூறிக் கொண்டே போகலாம். எது எப்படியோ கங்குவா படம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் சூர்யா. அதை ரசிகர்கள் காப்பாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.