More

விவேக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்  சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். சமூகவலைத்தளங்கள் மூலமாகவோ, அறிக்கை மூலமாகவே நடிகர்,நடிகைகள் தங்கள் சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

Advertising
Advertising

ஆனால், விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் விவேக் மரணம் பற்றி எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. விஜய் தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார். அவருக்கு தகவல் தாமதமாக கூட கிடைத்திருக்கலாம். குறைந்தபட்சம் தனது டிவிட்டரில் ஒரு டிவிட் செய்திருக்கலாம். ஆனால், விஜய் அதை செய்யவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார். மேலும், இன்று காலை விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். எனவே, நீண்ட நாள் சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts